கம்பார், மே 27 -
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து கல்வி வசதியின்றி அவதியுறும் பிரவின் ராஜ் பாலசுப்பிரமணியம் எனும் மாணவனின் பிரச்சனையைக் களையும் விதத்தில் மடிக்கணினி வழக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள மெத்தடிஸ் ஏசிஎஸ் இடைநிலைப்பள்ளியில் பயிலும் அம்மாணவனுக்கு மாலிம் நாவார் சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குறிய வி. பவானி அவர்கள் அந்த ஏழை மாணவனின் குறை அறிந்து புதிய மடிக்கணினியை வழங்கினார்.
"குறைந்த வசதியுடைய குடும்பத்திலிருந்து வந்து கல்வி பயிலும் மாணவர்தான் இந்த பிரவின் ராஜ்.
"கல்வியில் கூடுதல் வசதி செய்து தரும் சக்தி அவர் குடும்பத்திற்கு இல்லாததால், அம்மாணவரின் பெற்றோர்கள் மடிக்கணினி உதவி கேட்டு என்னுடைய அலுவலகத்திற்கு விண்ணப்பம் செய்திருந்தனர்.
"இன்று இம்மணவனின் கல்விக்கு உதவும் பொருட்டு புதிய மடிக்கணினி வழங்கியது மிக மகிழ்ச்சியாக உள்ளது.
"இந்த மடிக்கணினியை இணைய கல்விக்காக முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டு பிரவின் ராஜ் கல்வியில் இறந்த அடைவு நிலையைப் பெற வேண்டும் என்பதே எனது விருப்ப்பம்," என்று பவாணி கூறினார்.
இந்த உலகமயமாதலில் அதிவேகமாக வளர்ந்து வரும் இலக்கியல் தொழில்நுட்பத்தில் பாண்டித்தியம் பெற இந்த மடிக்கணினியை மாணவர் பிரவின் ராஜ் நன்கு பயன்படுத்திக்கொள்வார் என்று தாம் நம்புவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இவ்வேளையில் மக்கள் பிரதிநிதியான பாவானியிடமிருந்து மடிக்கணினியை உதவியாகப் பெற்ற அந்த ஏழை மாணவர் பேரானந்தமும் நிம்மதியும் அடைந்தார்.
"மாலிம் நாவார் சட்டமன்ற் உறுப்பினரிடமிருந்து மடிக்கணினியைப் பெற்றது பேரானந்தம் அடைகின்றேன்.
"என்னுடைய தேவை, கஷ்டம் அறிந்து தக்க சமயத்தில் எனக்கு மிகவும் அவசியமாக தேவைப்படும் மடிக்கணினியை வழங்கி மதிப்பிற்குரிய சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய பவானி அவர்கள் உதவியுள்ளார்.
"மனித நேயம் படைத்த அவருக்கு என் கோடி வணக்கங்கள். இந்த மடிக்கணினியின் மூலம் நான் பள்ளிப்பாடங்களை இணையத்தின் வழி செய்து முடிக்கவும், கல்வி கற்கவும் இனி மிகச் சுலபமாக இருக்கும்.
"மேலும் இந்த பேருதவியால் கல்வியில் கடும் உழைப்புடன் வெற்றிப்பெற எனக்கு ஓர் உந்துதலாக அமையும். சுடர் விளக்காயினும் தூண்டுகோள் வேண்டும் என்பர். அதைத்தான் இவர் (பவானி) எனக்கு செய்துள்ளார்," என்று பிரவின் ராஜ் பெருமிதம் அடைந்தார்.

கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks