இரு அமைப்பு ஒத்துழைப்பால் நாட்டிற்கு முதலீடு, வாணிபம், பொருளாதாரம், தொழில்நுட்பம் ஆகியவற்றில் நன்மை பயக்கும் - இர்மொஹிசாம்
கோலாலம்பூர், மே 4 -
CCPIT ஜியாமென் குழு / ஜியாமென் உலக வர்த்தக மையம் (WTC ஜியாமென்), கோலாலம்பூர் உலக வாணிப மையமும் கூட்டாக இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்த உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திட்டனர்.
இரு தரப்பும் பரஸ்பர உறவை வலுப்படுத்துதல் உட்பட வாணிபம், பொருளாதரத்தை மேம்படுத்துதல், பொருளாதாரம் தொழில்நுட்பப் பரிமாற்றம், முதலீடு ஒத்துழைப்பு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் வழங்க உடன்பட்டுள்ளனர் என்று கோலாலம்பூர் உலக வாணிப மையத்தின் நிர்வாக இயக்குனரான டத்தோஶ்ரீ இர்மொஹிசாம் இபுராகிம் தெரிவித்தார்.
இந்த உடன்படிக்கைச் சடங்கில் இர்மொயிசாமும் CCPIT ஜியாமென் குழுவின் தலைமைச் செயலாளருமான குமாரி யோ யு ஹொங் கையெழுத்திட்டனர்.
இந்த இரு தரப்பும் தங்களின் பலத்தையும் நிபுணத்துவத்தையும் முழுமையாகப் பயன்படுத்தி பயனடைவதற்காக முயற்சியில் ஈடுபடவிருப்பதாக சபதம் எடுத்துள்ளனர்.
இவ்விரு தரப்பினரின் ஒத்துழைப்பால் நாட்டிற்கு முதலீடு, வாணிபம், பொருளாதாரம், தொழில்நுட்பம் ஆகியவற்றில் நன்மை பயக்கும் என்பது திட்டவட்டமாக நம்பப்படுகிறது.
"இந்த இரு தரப்பினரிடையே ஏற்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தால் வாணிபத் துறையில் எங்களின் ஈடுபாட்டினை உறுதிப்படுத்திக் கொள்வதோடு மட்டுமின்றி இருநாட்டின் பொருளாதாரமும் மேம்பாடு காண்பதற்கு வழி வகுக்கின்றது.
"இந்த முயற்சியால் இரு தரப்பினரும் எங்களுடைய தொழில் வட்டத்தையும் தகவல் பரிமாற்றத்தையும் இன்னும் பரவலாக கொண்டு செல்ல இயலும்.
ஆயினும், இதில் மிக முக்கியம் என்னவென்றால் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையால் வாணிப வட்டாரத்தில் அகிம்சை சூழலை ஏற்படுத்தி வாணிப சமூகத்தை ஒன்றிணைக்க முடியும் என்று இர்மொஹிசாம் மேலும் கூறினார்.
இந்த நிகழ்வில் அவர் கான நாட்டின் துணை அதிபர் மஹாமுடு பவுமியா, நம்பியாவின் வாணிப மற்றும் தொழில்துறை அமைச்சர் லுசியா லிபும்பூ ஆகியோரை கானாவில் நடைபெற்ற உலக வாணிப மையச் அமைப்பின் சங்கத்தின் ஆண்டு பொது பேரவையில் சந்தித்தார்.
கடந்த ஏப்ரல் 23 முதல் 28ஆம் தேதி வரை நடைபெற்ற அம்மாநாட்டில் கலந்து கொண்ட முதல் மலேசியராக இர்மொஹிசாம் திகழ்கின்றார்.
உலகம் முலுவதிலுமுள்ள வாணிப வாய்ப்பினை கவர்வதற்காக இறக்குமதி ஏற்றுமதி, அனைத்துலக வாணிபம், கல்வி, பொருளாதாரம், ஆராய்ச்சி, தகவல் பரிமாற்றம் ஆகியவற்றில் வாய்ப்பினை ஏற்படுத்தி உலக வாணிபத்தைக் கவர்வதற்காக அவர் ஒத்துழைப்பை ஏற்படுத்துவதறகு ஆர்வம் கொண்டுள்ள முதலீட்டாளர்களைச் சந்திப்பதற்காக அவர் கானாவில் முகாமிட்டுள்ளார்.

கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks