கிள்ளான், மே 6 -
ஆட்டு மந்தைகளை ஓட்டிக் கொண்டுச் சென்ற ஆடவர் ஒருவரை இரு அடையாளம் தெரியாத நபரால் சரமாரியாக வெட்டிக் கொலை.
இந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் இங்குள்ள கம்போங் பெராபாட், காப்பாரில் நேற்று நிகழ்ந்ததாக வட கிள்ளான் மாவட்டக் காவல் தலைமையகத்தின் தலைவர் உதவி ஆணையர் விஜய ராவ் தெரிவித்தார்.
நேற்று மாலை 5.15 மணியளவில் ஆடவர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் கொடூரமாக கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டது தொடர்பாக புகார் ஒன்றைப் காவல் துறை பெற்றதாக அவர் கூறினார்.
"கிடக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு குற்றவியல் பகுதி விசாரணை அதிகாரி சில அதிகாரிகளுடன் விரைந்தனர்.
"அவ்விடத்தில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட சோதனையின் வழி, இறந்தவர் 46 மதிக்கத்தக்க உள்ளூர் ஆடவர் என்று தெரியவந்துள்ளது.
"சம்பவத்தின்போது, அவ்வாடவர், ஆட்டு மந்தைகளை மேய்த்துக்கொண்டிருந்த போது இரு சக்கர வண்டியில் அடையாளம் தெரியாத இரு ஆடவர்கள் ஆட்டிடையனை வழிமறைத்து பாராங்கத்தியால் சரமாரியகத் தாக்கியுள்ளனர்.
"அந்த தாக்குதலால் தலையிலும், கைகளிலும், உடலிலும் பலத்த வெட்டுக்காயங்களுக்கு உள்ளான அவ்வாடவர் சம்பவம் நடந்த இடத்திலேயே சரிந்து விழுந்தார்," என்று விஜய ராவ் ஓர் அறிக்கையின் வழி உறுதிப்படுத்தினார்.
அச்சம்பவத்தைக் கண்ட பொதுமக்களின் உதவியுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அந்த ஆடவர் கிள்ளான் பெரிய மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
ஆயினும், மருத்துவர்கள் எவ்வளவு போராடியும், சிகிச்சைப் பலனின்றி அவ்வாடவர் உயிரிழந்ததாகக் மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
இதனிடையே காவல் துறை செக்ஷன் 302 குற்றவியல் வன்முறை பிரிவின் கீழ் குற்ற அறிக்கையைத் தொடங்கி விசாரனையை மேற்கொண்டு வருவதாக விஜய ராவ் மேலும் கூறினார்.
இந்த கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ள சந்தேகத்திற்குரிய அவ்விரு ஆடவர்களையும் காவல் துறையினர் தற்போது வலை வீசி தேடி வருவதாக அவர் மேலும் உறுதிப்படுத்தினார்.
அவ்வகையில், இச்சம்பவம் தொடர்பாக தகவல் கொண்டுள்ளவர்கள் விசாரணைக்கு உதவும் விதமாக விசாரணை அதிகாரியான உதவி சூப்பரின்டென்டன் ஹனிஸ் இட்ரிசை 019-909 9763 என்ற எண் வழியாக அல்லது வட கிள்ளான் காவல் தலைமையகத்திற்கு 03-3291 2222 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks