எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட ஆஸ்திரேலிய வீரர் மரணம்!



எவ­ரெஸ்ட், மே 23 -
எவ­ரெஸ்ட் சிக­ரத்தை வெள்­ளிக்­கி­ழமை தொட்ட ஆஸ்­திரேலியா­வின் பெர்த் நக­ரைச் சேர்ந்த ஜேசன் பெர்­னார்ட் கென்­னி­சன், 40, வெள்­ளிக்கிழமை உயி­ரி­ழந்­தார்.

சுமார் 8.849 மீட்­டர் உய­ரம் கொண்ட சிக­ரத்தை வெற்­றி­க­ர­மாக அடைந்த அவர், அங்­கி­ருந்து கீழே இறங்­கும்­போது அவ­ரது உடல்­நிலை பாதிக்­கப்­பட்­டது. வழி­காட்­டி­கள் துணை­யு­டன் அவர் முகாம் நோக்கி வந்­தார். ஆனால் கடு­மை­யான காற்று வீசி­ய­தால் முகா­மிற்கு திரும்ப முடி­ய­வில்லை.

சிறிது நேரத்­திற்­குள் அவ­ரது உடல்­நிலை மேலும் பாதிக்­கப்­பட்டு மயங்கி விழுந்து இறந்­தார். எவ­ரெஸ்ட் மலை­யேறுவதற்­கான இந்­தப் பரு­வத்­தில் இது 10வது மர­ணம் என்று கூறப்­ப­டு­கிறது.

அவ­ரது உடல் இன்­னும் மலை­யி­லேயே உள்­ளது. உடலை மீட்டு கீழே கொண்டு வரும் பணி­யில் அதி­கா­ரி­கள் ஈடு­பட்­டுள்­ள­னர்.

கென்­னி­ச­னின் மர­ணம் குறித்த செய்தி அறிந்து அவ­ரது குடும்­பத்­தி­னர் கடும் அதிர்ச்­சி­யும் வேத­னை­யும் அடைந்­த­னர்.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement