மக்கள் செல்வனின் புதிய படப்பிடிப்புத் தளமாக பேராக் தேர்வு

பேராக் மாநில ஆட்சி செயற்குழு உறுப்பினருடன் படப்பிடிப்புக் குழு சந்திப்பு


ஈப்போ, மே 11 - 
இந்தியத் திரைப்படத்துறையில் இன்று பண்முக நட்சத்திர நடிகனாகத் திகழும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் புதியப் படப்பிடிப்பு விரைவில் பேராக் மாநிலத்தில் நடைபெறவிருக்கிறது. இது தொடர்பாக நேற்று பேராக் மாநில அரசாங்கம் தென் இந்திய திரைப்படக்குழுவை கோலிவுட் திரைப்பட தயாரிப்பிற்காக வரவேற்று முக்கிய சந்திப்பை நடத்தியுள்ளது.

இந்த அரியத் தகவலை அம்மாநிலத்தின் செயற்குழு தமது அதிகாரப்பூர்வ முகநூலில்  தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட விஜய் சேதுபதியின் படக்குழுவினர் பேராக் மாநிலத்திலுள்ள தங்களுக்கு வேண்டிய சுற்றுலாத் தலங்களைத் தேர்ந்தெடுத்து புதிய படப்பிடிப்பைத் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று மாநில தொலைத்தொடர்பு, பல்லூடகம், அரசு சார இயக்கங்கள் செயற்குழுவின் தலைவர் மாண்புமிகு அஸ்லான் ஹெல்மி  பெருமிதத்துடன் கூறினார்.

"இந்திய திரைப்படத்திற்கு எங்களின் சிறப்பு மிக மாநிலத்தை அறிமுகப்படுத்துவதில் நான் பெருமை கொள்கிறேன்.

"இதுபோன்ற திரைப்படக்குழு வருகையும், படப்பிடிப்பின் மூலமும் மாநிலத்திலுள்ள தலைச்சிறந்த சுற்றுலாத் தளங்கள் உலக மக்களின் பார்வைக்கு கொண்டு செல்லும் மிகப் பெரிய முயற்சியாகும்.

"மேலும் இந்த சிறந்த ஒத்துழைப்பின் மூலம் நமது உள்நாட்டு  கலைஞர்களையும், மலேசியத் திரைப்படத் தொழில்நுட்பக் கலைஞர்களையும் மேம்படுத்த வழிவகுக்கும்," என்று அந்த அறிக்கையில் மேலும் கூறினார்.
 
நேற்று காலையில் தமிழ் திரைப்பட இயக்குனர் ஆறுமுகம் குமார் மற்றும் அவரின் திரைப்படக் குழு விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாவிருக்கும் புதிய படத்திற்காக ஈப்போவிலுள்ள சில இடங்களைப் பார்வையிட்ட பின் மாண்புமிகு அஸ்லான் அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்தனர்.

இதற்கு முன் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் என்ற திரைப்படத்தையும் இதே ஆறுமுக குமார் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய  படப்பிடிப்பு வேலைகள் ஈப்போவிலும் அதனைச்  சுற்றியுள்ள பகுதகளிலும்  உள்ள சில பிரசித்திபெற்ற சுற்றுலத் தலங்களிலும் பேராக் இலக்கியல் நிறுவனத்தின்  வழிகாட்டலுடன் விரைவில் தொடங்கவிருக்கிறது என்று அஸ்லான் மேலும் கூறியுள்ளார்.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement