கோலாலம்பூர், மே 2 -
இங்குள்ள கிள்ளான் லாமா சாலையில் அமைந்திருக்கும் ஒரு கடையின் முன்புறத்தில் சிறு குண்டு வெடிப்பு சம்பவத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் இரு ஆடவர்களை காவல் துறை வலைவீசி தேடி வருகிறது.
இந்த திடுக்கிடும் சம்பவம் இன்று அதிகாலை 6 மணியளவில் நடந்ததாக பிரிக்பில்ஸ் மாவட்ட காவல் தலைமையகத்தின் தலைவர் உதவி ஆணையர் அமிஹிசாம் அப்துல் சுக்கோர் அவர்கள் இச்சம்பவம் தொடர்பாக வெளியிட்ட ஓர் அறிக்கையில் உறுதிப்படுதினார்.
முன்பதாக காவல் துறை காலை 6 மணியளவில் 27 வயதுதக்க ஓர் ஆடவரிடமிருந்து இந்த வெடிப்புச் சம்பவம் தொடர்பாக புகாரைப் பெற்றதாக அவர் மேலும் கூறினார்.
"அப்புகாரில் அந்த ஆடவர் சம்பவம் நிகழ்ந்த பகுதியிலுள்ள பாதுகாவலரிடமிருந்து கடைக்கு முன் வெடிச் விபத்து ஏற்பட்டதாக தொலைபேசியின் வழி தகவல் கிடைக்கப் பெற்றார்.
"புகார்தாரர் அளித்த தகவல் அடிப்படையில், தடவியல் நிபுணர்கள் என காவல் விசாரணைப் படை ஒன்று சம்பவம் நடந்த பகுதிக்கு விரைந்தது.
"அப்பகுதியில் மேற்கொண்ட பரிசோதனையில், சிறிய குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது உறுதியானது," என்றார் அவர்.
மேலும், அச்சம்பவம் நடந்த இடத்தில் அதாவது கடையின் முன் உள்ள புதரருகே வெடிபொருளாக வடிவமைக்கப்பட்ட மூன்று பிவிசி குழாய் கண்டுபிடிக்கப்பட்டதாக உறுதிப்படுத்தினார்.
அந்த வெடிப்பொருளைப் பரிசோதித்த தடவியல் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு படை, அவை அனைத்தும் தொலைவு கட்டுப்பாட்டுக் கருவி “Improvised Explosive Device (iED)” ஐ அந்த மூன்று குழாய்களில் இணைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளாதாகக் கூறினார்.
"ஆயினும் இந்த சம்பவத்தில் உயிருடர் சேதம் எதுவும் நிகழவில்லை என்றும் மாறாக அந்த சாலையோரம் அமைந்துள்ள விளக்குக் கம்பம் மட்டும் பழுதடைந்தது.
"சம்பவம் இடத்தில் வெடிச்சிதரல்களின் துகல்களையும் கைரேகைகளும், ரகசிய கண்காணிப்புக் கேமிராவையும் விசாரணைக்காக கைப்பற்றப்பட்டுள்ளது," என்று அவர் மேலும் தெரிவித்தார்.
தற்போது, காவல் துறையினர் இச்சம்பவத்தை செக்ஷன் 6, 1957 வெடிப்பொருள் சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார்.
அந்த ரகசியக் கேமிராவில் பதிவாகியுள்ள இரு ஆடவர்களை தற்போது காவல் துறை தீவிரமாகத் தேடிவருவதாகத் அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக தகவலுடைய பொதுமக்கள் அருகேயுள்ள காவல் நிலையத்திற்கு விரைந்து விசாரணைக்கு உதவும் படி அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.

கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks