சுபாங் ஜெயா, மே 12 -
குடியிருக்கும் வாடகை வீட்டை காமலீலை அரங்கேறும் பள்ளியறையாக மாற்றி விபச்சாரத்தில் ஈடுப்பட்ட இரு இலங்கை விலைமாதர்கள் கையும் களவுமாகச் சிக்கினர்.
வங்காளதேசம் மற்றும் இந்திய அந்நியத் தொழிலாளர்களைக் குறிவைத்து அவர்களிடம் வெறும் ரிம. 60 மட்டுமே கட்டணம் என்று வசூலித்து வந்துள்ளதாக சுபாங் ஜெயா மாவட்ட காவல் தலைமையகத்தின் தலைவர் உதவி ஆணையர் வான் அஸ்லான் வான் மாமாட் கூறினார்.
கடந்த புதன்கிழமை நள்ளிரவன்று பண்டார் சன்வேயில் உள்ள குடியிருப்புப் பகுதியில் இயக்கி வந்த இந்த சட்டவிரோத தொழிலை காவல் துறை அதிரடி சோதனையின் வழி முறியடித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட அவ்விரு இலங்கைப் பெண்களும் 30, 38 வயது மிக்கவர்கள் என்றார். "அந்த இரு பெண்களும் விபச்சாரத்திற்காக தங்களது வாடிக்கையாளர்களை இடைத்தரகர்களின் துணையுடன் வலைவீசி பிடிக்கின்றனர்," என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
மேலும் அப்பெண்கள் வசித்து வந்த அவ்விட்டில் மேற்கொள்ளப்பட்ட தொடர் சோதனையில், பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள், சிறு தொகைப் பணம் ஆகியவற்றைக் கைப்பற்றினர்.
அவ்விரு பெண்களும், இந்தியா மற்றும் வங்காள தேச ஆடவர்களை மட்டுமே தங்களின் விபச்சார சுகத்திற்கு குறிவைத்து இழுக்கின்றனர் என்று விவரித்தார்.
தற்போது அந்த இரு பெண்களும் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக இந்த சட்டவிரோத செயலில் ஈடுபடுவது தெரியவநதுள்ளதாக அவர் சொன்னார்.
சந்தேகத்துக்குரிய அவ்விருவரும் எதிர்வரும் 23 மே வரை 14 நாட்களுக்கு விசாரணைக்காக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
காவல் துறையினர் இதனை செக்ஷன் 372பி குற்றவியல் வன்முறை, 1959/63 ஆம் ஆண்டு குடிநுழைவு சட்டத்தின் கீழ் விசாரித்து வருவதாக அவர் மேலும் கூறினார்.

கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks