உடந்தையாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவரும் கைது
கோலாலம்பூர், மே 10 -
ஆடவர் ஒருவர் தமது மகளிடம் பாலியல் வல்லுறவு கொண்ட அருவருக்கத்தக்க செயல் அம்பலமானது.
சுமார் 30 வயதுடைய அந்த ஆடவர் இறுதியில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார் என்று சுங்கை பூலோ மாவட்ட காவல் துறை தலைமையகத்தின் தலைவர் சூப்பரின்டென்டன் ஷாஃபாத்துன் அபு பாக்கார் தெரிவித்தார்.
இந்நடவடிக்கையில், அந்த ஆடவருக்கு உடந்தையாக இருந்ததாகக் நம்பப்படும் ஓர் பெண்ணையும் காவல் துறை கைது செய்துள்ளதாக அவர் மேலும் உறுதிப்படுத்தினார்.
கடந்த மே 8ஆம் தேதியன்று தாம் சொந்த வளர்ப்புத் தந்தையின் பாலியல் வல்லுறவு கொடுமைக்கு பலியானதாக பாதிக்கப்பட்ட அந்த 15 வயது இளம் பெண் சௌஜானா உத்தாமா காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்த இளம் பெண் அளித்த புகாரின் அடிப்படையில், இன்று குற்றவியல் பகுதி காவல் படை சுங்கை பூலோவில் அந்த சந்தேகத்துக்குறிய ஆடவரை கைது செய்ததாக அவர் மேலும் கூறினார்.
"அந்த ஆடவர், பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு கடந்த ஜனவரி மாதத்தில் தங்கும் விடுதியில் இந்த பாலியல் வன்கொடுமையைப் புறிந்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது," என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது உறுதிப்படுத்தினார்.
மேலும், முன்பதாக அவ்வாடவர் கோலசிலாங்கூர் காவல் துறையால் கைது செய்யப்பட்டு சுங்கை பூலோ காவல் படையிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஷஃபத்துன் கூறினார்.
அதுமட்டுமின்றி, இந்த கேவலமான செயலுக்கு உடந்தையாக இருந்ததாக சந்தேகத்தின் பேரில் குடும்பப் பெண் ஒருவரையும் காவல் துறை விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
இதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட அந்தக் குடும்ப மாது ஏற்கனவே புன்சாக் ஆலாம் பகுதியில் வேறொரு குற்றத்திற்காக கைது செய்யப்பட்டதாக ஷாஃபாத்துன் மேலும் கூறினார்.
இந்த இரு சந்தேகத்துக்குரிய நபர்களையும் நாளை வியாழக்கிழமையன்று விசாரணைக்காக தடுப்புக் காவல் கோரி நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர் என்று ஷாஃபாத்துன் மேலும் கூறினார்.
பள்ளிக்குச் செல்லாத அந்த பாதிக்கப்பட்ட பெண் தற்பொது பாதுகாப்பாக இருப்பதாக அவர் சொன்னார்.

கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks