மகனிடம் பாலியல் வல்லுறவு கொண்ட தாய்க்கு காவல் நீட்டிப்பு


கோலசிலாங்கூர், மே 8 -
பெற்ற மகனை வலுக்கட்டாயப்படுத்தி அவ்விளைஞனுடன் பாலியல் வல்லுறவை வைத்துக் கொண்டதாக சந்தேகத்தின் பேரில் கைதான குடும்பமாதுவின் தடுப்புக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஐந்து பிள்ளைகளுடன் கணவனின்றி தனித்து வாழும் அப்பெண்ணை காவல் துறை மேலும் மூன்று நாட்களுக்குத் தடுத்து வைத்துள்ளதாக  கோலசிலாங்கூர் மாவட்டக் காவல் தலைமையகத்தின் தலைவர் சூப்பரின்டென்டன் ரம்லீ  காசா  இன்று தொடர்புக் கொண்டபோது உறுதிபடுத்தினார்.

"இதற்கு முன் அப்பெண் சமூக பொதுநல துறை அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த செவ்வாயன்று கைது செய்யப்பட்டு ஐந்து நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டார்.

"ஆயினும், இன்றோடு (ஞாயிறு) அத்தவணைக்காலம்  முடிவடைவதால் அந்த 33 வயதுடைய பெண்னை மீண்டும் கோலசிலாங்கூர் மாவட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்  காவல் நீட்டிப்பு கோரி ஆஜர் படுத்தினோம்.

"காவல் துறையின் விண்ணப்பததைச் செவிமடுத்த மாஜிஸ்திரேட் மேலும் 3 நாட்களுக்கு அப்பெண்னை தடுப்புக் காவலில் வைத்து  விசாரணை யை  முடிக்க  அனுமதி பெறப்பட்டது," என்றார்.

அவ்வகையில், அப்பெண்னை எதிர்வரும்  புதன்கிழமை  அதாவது மே10 ஆம் தேதிவரை கூடுதல் தடுப்புக்காவலில் வைத்து விசாரணையைக் காவல் துறை நிறைவு செய்யும் 
என்று மேலும் கூறினார்.

விசாரணை அறிக்கை முழுமை அடைந்ததும் அதனை  அடுத்த கட்ட நடவடிக்கைக்காக துணை அரசு வழக்குரைஞரிடம்  ஒப்படைக்கப்படும் என்று ரம்லீ மேலும்  சொன்னார்.

தற்போது, காவல் துறை இந்த சம்பவத்தை செக்‌ஷன்  14, செக்‌ஷன் 5  2017 ஆண்டு சிறார் வன்கொடுமை சட்டத்தின் கீழ் விசாரித்து வருகின்றனர் என்று அவர் மேலும் கூறினார்.

இந்த அருவருக்கத்தக்க சம்பவம் இங்குள்ள புன்சாக் ஆலாமிலுள்ள அந்த குடும்ப மாதுவின் வீட்டில் நடந்துள்ளது. 

அந்த 33 வயதுடைய  தனித்து வாழும் அக்குடும்ப மாதுவைக் காவல் துறை அவரது வீட்டில் கடந்த வாரம் செவ்வாய் மே 2ஆம் தேதி மாலையன்று  கைது செய்தனர்.

அதற்கு முன்னதாக சமூக பொதுநலத் துறை பாதிக்கப்பட்ட 14 வயது சிறுவனிடம் அவனது தாய் வழுக்கட்டாயமாக உடலுறவில் ஈடுபட்ட காணொளி ஒன்றை கைப்பற்றினர்.

அவர்கள் உடனடியாக பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ஏற்பட்ட பாலியல் வன்முறை குறித்து காவல் துறையிடம் புகார் அளித்தனர்.

கிடைக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், கோலசிலாங்கூர் மாவட்ட காவல் தலைமையகத்தின் டி11 குற்றவியல் துறை அதிகாரிகள் விரைந்து  அந்த குடும்ப மாதைக் கைது செய்துள்ளனர் என்று  ரம்லீ  புதனன்று ஓர் அறிக்கையின்வழி உறுதிபடுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அம்மாதுவிற்கு மொத்தம் ஐந்து பிள்ளைகள் என்றும் இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன் அவளது மூன்றாவது மகன் என்று தெரியவந்துள்ளது.

"இந்த அருவருப்பான சம்பவம் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில்  நடந்துள்ளது. மேலும் சம்பவத்தின் போது அக்குடும்பமாது தனது வாயின் வழி மகனின் மர்ம உறுப்பைப் புணர்ந்துள்ளார்.

பிறகு தன் மகனை தன்னுடன் உடலுறவில் ஈடுபடும்படி கட்டாயப்படுத்தி அவளது வீட்டில் உள்ள கட்டிலறையில் பாலியல் வல்லுறவு கொண்டதோடு, அந்த அருவருக்கத்தக்க நடவடிக்கையை தனது கைத்தொலைப்பேசியால் பதிவு செய்துள்ளது முதல் கட்ட விசாரணையின் வழி தெரியவந்துள்ளது.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement