கம்பார், மே 4 -
தேர்வு செய்யப்பட்ட அனைத்து கிராமத் தலைவர்களும் தங்களின் கடமையைச் செய்யும்போது உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களின் தேவைக்கும் நம்பிக்கைக்கும் முன்னுரிமை வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அன்மையில் மாலிம் நாவார் சட்டமன்றத் தொகுதியின் கீழ் செயல்படுகின்ற அனைத்து கிராமத் தலைவர்களுடன் நடைப்பெற்ற சந்திப்பின் போது அதன் சட்டமன்ற உறுப்பினரான மாண்புமிகு சாஷா வீரையா அவர்கள் இந்த அரைக்கூவலை விடுத்தார்.
மம்பாங் டிஅவான், மாலிம் நாவார், கம்போங் துரோனோ மைன்ஸ், கம்போங் தீமா தஞ்சோங் துவாலாங், சுங்கை டுரியான் கிராமத் தலைவர்கள் இச்சந்திப்புக் கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.
"கிராமத் தலைவரின் பொறுப்பு என்பது தன்னுடைய சுற்றுப்பகுதியைச் சார்ந்த மக்களை மட்டுமே சார்ந்ததல்ல. மாறாக பிரதமரின் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் மடானி அரசங்கத்தின் கௌரவத்தையும் பிரதிபலிப்பதாகும்.
"அதுமட்டுமின்றி, ஒரு கிராமத் தலைவர் அரசாங்கத்திற்கு கண் மற்றும் காது போன்றவர். அதேவேளை மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதில் விவேகமிக்கவராக இருத்தல் மிக முக்கியம்," என்று சாஷா நினைவூட்டினார்.
தமது பார்வையில் தற்போது அனைத்து கிராமத் தலைவர்களும் கிராம மேம்பாட்டு அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டது முதல் தங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளைச் செயலாற்றத் தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து கிராமத் தலைவர்களும் மாலிம் நாவார் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்துடன் ஒன்றிணைந்து மக்களின் பிர்ச்சனைகளைக் களைந்து அவர்களின் நல்வாழ்வின் தரத்தை மேம்படுத்துவதற்குத் உண்மையாகப் பாடுபடுவோமென உறுதி பூண்டுள்ளது குறித்து பெருமிதம் அடைந்தார்.

கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks