இயக்குனரும், பன்முக நடிகருமான மனோபாலா திடீர் மரணம்!

தமிழ் ரசிகர்களையும், தென்னிந்திய சினிமாக் கலைஞர்கள் பேரதிர்ச்சி


சென்னை, மே 3 - 
தமிழ் திரைப்பட இயக்குனரும், பன்முக  நடிகருமான மனோபாலா சென்னையில் இன்று மே 3ஆம் தேதி  உடல் நலக்குறைவால் காலமானார்.

கல்லீரல் பிரச்சனை காரணமாக கடந்த சில வாரங்களாக  சாலி கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்தவாறு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று இயற்கை எய்தினார். அன்னாரின் பூத உடலுக்கு இன்று சென்னை வளசரவாக்கம் மின்மயானத்தில் நாளை காலை 10.30 மணிக்கு இறுதி சடங்கு நடைபெறவிருக்கிறது.

இதற்கிடையே அவர் ட்விட்டரில் பதிவிட்ட கடைசி படம் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் இருந்த முக்கிய நபர்களில் ஒருவர் மனோபாலா. இந்த காலத்து சினிமா ரசிகர்களுக்கு இவரை நடிகராக மட்டுமே தெரியும் ஆனால், சுமார் 40 படங்களை இயக்கி உள்ளார். மேலும், 16 டிவி தொடர்களையும் அவர் இயக்கியுள்ளார். பல முகங்களைக் கொண்ட மனோபாலா, தயாரிப்பாளர், இயக்குநர், காமெடி நடிகர், குணச்சித்திர நடிகர் எனப் பல முகங்களைக் கொண்டவர். 

குறிப்பாக காமெடி நடிகராக இவர் தமிழ் சினிமாவை நீண்ட காலம் கலக்கி வந்தார். 69 வயதான மனோபாலா இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் பல கேரக்டர்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியிக்குநராக இருந்த மனோபாலா, ஆகாய கங்கை, பிள்ளை நிலா எனப் பல முக்கிய படங்களை இயக்கியுள்ளார். 1994ஆம் ஆண்டு தாய்மாமன் என்ற படத்தில் அறிமுகமான இவர், அதன் பின்னர் பல நூறு படங்களில் நடித்துள்ளார். இப்படி படுபிஸியாக நடித்து வந்த மனோபாலா இன்று யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென காலமானார். 

மனோபாலா நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக அவருக்குக் கல்லீரல் பிரச்சனை இருந்த நிலையில், இதற்காக அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைக்குப் பின் அவர் வீட்டில் ஓய்வெடுத்து வந்த நிலையில், அவருக்கு திடீரென மூச்சுத் திணறலும் ஏற்பட்டுள்ளது. இன்று நெஞ்சு வலி அதிகம் ஆகவே அவர் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது. மனோபாலாவுக்கு கடந்த ஜனவரி மாதம் ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மனோபாலா உயிரிழந்துள்ள நிலையில், அவர் கடைசியாகப் பதிவிட்ட படம் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதில் சிவப்பு நிற டி சர்ட் போட்டிருக்கும் மனோபாலா சாமியார் ஒருவரது படத்துடன் நிற்கிறார். இந்தப் படம் இப்போது ட்விட்டரில் டிரெண்டாகும் நிலையில், பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இயக்குனர் பாரதி ராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்து, 1982ல் ஆகாய கங்கை என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

பிறகு தனது இயக்குனர் பயனத்தில் பிள்ளை நிலா, ஊர்க்காவலன், என் புருஷந்தந்தான் எனக்கு மட்டும்தான் உள்ளிட்ட 24 படங்களை இயக்கியும், ஏராளமான படங்களில் நகைச்சுவைக் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

தஞ்சை மாவட்டம், மருங்கூர் என்ற ஊரில் 1953ல் டிசம்பர் 8 இல் பிறந்த இவரது நிஜப்பெயர் பாலசந்தர். பாரதிராஜாவின் "புதிய வார்ப்புகள்" திரைப்படத்தின் மூலம் உதவி இயக்குனராக தனது திரைப்பயணத்தை துவக்கியவர் இவர்.

"நிறம் மாறாத பூக்கள்", "கல்லுக்குள் ஈரம்", "நிழல்கள்", "அலைகள் ஓய்வதில்லை", "டிக் டிக் டிக்" என பாரதிராஜாவின் பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார். கடைசியாக இவர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் 2002ல் நடிகர் ஜெயராம் நடித்து வெளிவந்த "நைனா" என்ற திரைப்படமாகும்.

2014ம் ஆண்டு தனது "மனோபாலாஸ் பிக்சர் ஹவுஸ்" என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் "சதுரங்க வேட்டை" என்ற திரைப்படத்தைத் தயாரித்து தன்னை ஒரு தயாரிப்பாளராகவும் திரையுலகுக்கு அறிமுகப்படுத்திக் கொண்டார்.

இவரது இந்த திடீர் மறைவுக்கும் முன் நகைச்சுவை நடிகர் மயில்சாமி, ஜனங்களின் கலைஞன் என்று மக்களால் போற்றப்பட்ட விவேக் ஆகியோரின் அகலா மரணமும் உலக ரசிகர்களைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

அன்னாருக்கு மிக நெருக்கமாக இருந்த சில முக்கிய நடிகர்களான ராதிகா சரத்குமார், ரஜினிகாந்த், கமல்ஹாசன், இசைஞானி இளையராஜா, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ஆகியோர் டுவிட்டரின் வழி தங்களது ஆழ்ந்த அனுதாபங்களைப் பதிவிட்டுள்ளனர்.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement