முகநூலில் பொது அமைதியை சீர்குலைக்கும் அறிக்கை: 61 வயது முதியவர் கைது


கோலாலம்பூர், மே 7 - 
நாட்டின் அமைதியையும் மக்களின் ஒற்றுமையை அச்சுறுத்தி, சீர்குழைவு ஏற்படுத்தும் விதமாக அறிக்கை ஒன்றை  முகநூலில் பதிவேற்றம் செய்த சந்தேகத்தின் பேரில் முதியா ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சுமார் 61 வயதுமிக்க அந்த உள்ளூர் முதியவர் ஹுலு மலாக்காவில் நேற்று பிடிபட்டதாக மலேசியக் காவல் படையின் செயலாளார் துணை ஆணையர் நூர்சியா முகமட் சாடுடின் இன்று அறிக்கை ஒன்றில் உறுதிப்படுத்தினார்.

அவ்வாடவர் கோலாலம்பூருக்குக் கொண்டுவரப்பட்டு தொடர் விசாரணைக்காக  தற்போது  எதிர்வரும் செவ்வாய்கிழமை மே 9 வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

"தற்போது  டி5 புக்கிட் அமானைச் சேர்ந்த  சிறப்பு குற்றவியல் விசாரணை குழு (யூஎஸ்ஜெடி) இந்த சம்பவத்தை  தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

"கைதான அந்நபர், செக்‌ஷன் 4(1) நிந்தனைச் சட்டம் 1948இன் கீழ் விசாரிக்கப்படுகிறார்," என்று நூர்சியா  மேலும் கூறினார்.

அதுமட்டுமின்றி, செக்க்ஷன் 504 குற்றவியல் வன்முறை சட்டம், செக்க்ஷன் 233 தொலைத்தொடர்பு பல்லூடக சட்டம் 1998 ஆகியற்றின் கீழ் விசாரிக்கப்படுவதாக  அவர்  மேலும் தெரிவித்தார்.

இதனிடையே பொதுமக்கள் தேவையில்லாமல் முகநூலில் நாட்டின் அமைதிக்கும்   சுபிட்சத்திற்கும்   அச்சுறுத்தலை ஏற்படுத்தும்  விதமாக எந்த ஒரு அறிக்கையையும் வெளியிட வேண்டாம் என்று  எச்சரிக்கை விடுத்தார்.

அவ்வாறு சட்டவிரோத செயலில் ஈடுபடும் நபர் மீது கடுமையான சட்டம் பாயும் என்று நினைவுபடுத்தினார்.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement