5ஜி தொலைத்தொடர்புக் கட்டமைப்புக்கு மாறுவதால் நிதித் தாக்கம் குறைவு - அன்வார்



கோலா­லம்­பூர், மே 26 - 
மலே­சி­யா­வில் ஐந்­தாம் தலை­மு­றைத் தொலைத் தொடர்­புக் கட்­ட­மைப்­புக்கு மாறும் திட்­டத்­தால் அர­சாங்­கத்­திற்கு நிதித் தாக்­கங்­கள் பெரு­ம­ள­வில் குறையும் என்று பிர­த­மர் அன்­வார் இப்­ரா­கிம் உறு­தி­ய­ளித்­துள்­ளார்.

நிதி­ய­மைச்­ச­ரு­மான அவர், நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று அவ்­வாறு கூறி­னார். தற்­போது ஒரு தொடர்­புக் கட்­ட­மைப்­பைப் பயன்­ப­டுத்­தி­வரும் நிலை­யில் இருந்து இரண்டு கட்­ட­மைப்­பு­க­ளுக்கு மாறும் நட­வ­டிக்கை குறித்து அர­சாங்­கம் முன்­ன­தாக அறி­வித்­தி­ருந்­தது.

அத­னால் இழப்­பு­கள் ஏற்­ப­டுமா என்­றும் பய­னா­ளர்­கள் அதி­கத் தொகை செலுத்த வேண்­டி­யி­ருக்­குமா என்­றும் நாடா­ளு­மன்­றத்­தில் கேள்வி எழுப்­பப்­பட்­டது. அதற்­குப் பதில் அளிக்­கை­யில் பிர­த­மர் அன்­வார் அவ்­வாறு குறிப்­பிட்­டார்.

தேசி­யப் பாது­காப்­பின் நலன் கருதி தமது அமைச்­ச­ரவை இரண்டு கட்­ட­மைப்­பு­க­ளுக்கு மாறு­வ­தன் தொடர்­பில் முடிவு எடுத்­த­தாக திரு அன்­வார் கூறி­னார்.

அந்­ந­ட­வ­டிக்­கைக்கு தொலைத்­தொ­டர்பு நிறு­வ­னங்­கள் நிதி வழங்­கும். பய­னா­ளர்­க­ளுக்கு அவை குறை­வான விலை­யில் சேவை வழங்­கும்.

எந்­தத் துறை­யி­லும் போட்­டித்­தன்­மையை ஊக்­கு­வித்­தால் பய­னா­ளர்­க­ளுக்­குச் செலவு குறை­யும் என்­பதை திரு அன்­வார் சுட்­டி­னார்.

முன்­ன­தாக, இரண்டு கட்­ட­மைப்­பு­க­ளுக்கு மாறு­வ­தால் தொலைத் தொடர்பு நிறு­வ­னங்­களோ பய­னா­ளர்­களோ இணை­யச் சேவைக்கு அதி­கத் தொகை செலுத்த நேரி­டா­தென்று தொடர்பு, மின்­னி­லக்க அமைச்­சர் ஃபாஹ்மி ஃபாட்சில் கூறி­னார்.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement