கம்போடியா சீ விளையாட்டில் 40 தங்கத்திற்கு இலக்கு!- ஹன்னா யோ

440 இளம் வீரர்கள் முதல் முறையாக களம் இறங்குகின்றனர்!


புக்கிட் ஜாலில், மே 1 -
எதிர்வரும் மே 5ஆம் தேதி கம்போடியாவில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படவிருக்கும் 32 ஆவது தென் கிழக்கு ஆசிய போட்டியில் மலேசியா அணி 40 தங்கப்பதக்கங்களுக்குக் குறி வைத்து களத்தில் இறங்கியுள்ளது.

இம்முறை தேசிய அணி மொத்தம் 676 விளையாட்டாளர்களை மலேசியாவைப் பிரதிநிதித்து 40 தங்க வெட்டையைத் தொடங்கவுள்ளது. மேலும் இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால், அந்த 676 விளையாட்டாளர்களில் 440 வீரர்கள் முதல் முறையாக களம் காணவிருக்கும் இளம் விளையாட்டாளர்கள் ஆவர்.

ஈராண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் இப்போட்டி, இம்முறை கம்போடியா உபசரணை நாடக தலைமையேற்றுள்ளது. இதன் விளைவாக, சுமார் 57 விதமான போட்டி விளையாட்டுகளை பட்டியலிளிருந்து உபசரணை நாடான கம்போடியா நீக்கியுள்ளது.

அவற்றில் மலேசியா பதக்கங்கள் பெறும் வாய்ப்புடைய சுமார் 18க்கும் மேற்பட்ட விளையாட்டுகள் இம்முறை இடம்பெறாததால் நம் அணிக்குப் பதக்கங்களை குவிக்கும் வாய்ப்புகள் மிகக் குறைவே.

"இந்த அனைத்து விவகாரங்களையும் கருத்தில் கொண்டே, மூன்று கட்ட கலந்துரையாடலுக்குப் பிறகு, இம்முறை தெற்கிழக்காசிய விளையாட்டுப் போட்டியில் மலேசியா 400 தங்கம், 37 வெள்ளி, 64 வெண்கலப் பதக்கங்களை இலக்காகக் கொண்டுள்ளது என்று இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா யோ பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவித்தார்.

தேசிய விளையாட்டும் சங்கத்தில் நாட்டைப் பிரதிநிதிக்கும் 676 போட்டியாளர்களிடம் ஜாலோர் கெமிலாங் தேசியக் கோடியை வழங்கும் சடங்கிற்குப் பின் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும், உபசரணை நாடு என்ற வாய்ப்பைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு கம்போடியா அந்நாட்டு விளையாட்டு வீரர்களுக்கு  நன்மை பயக்கும் விதமாக இதுபோன்ற முக்கிய சில விளையாட்டுகளை இம்முறை அகற்றியுள்ளது மலேசியா மட்டுமில்லாமல், சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு பெரிய பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் மே 17 வரை நடைபெறவிருக்கும் இந்த போட்டியில் உள்ள 582 விதமான விளையாடுகளில் மலேசியா மொத்தம் 340 இல் மட்டுமே போட்டியிட்டு பதக்கங்களைக் குவிய போராடும் என்றார்.

இதன்வழி மலேசியா சுமார் 242 தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களுக்காக போட்டியிடாது. காரணம், இம்முறை கம்போடியா தேர்வு செய்து அறிமுகப்படுத்தியுள்ள விளையாட்டுகள் அனைத்திலும் மலேசிய இதற்கு முன் பங்கேற்றது இல்லை.

மேலும், போட்டியாளர்களுக்கான தங்கும் விடுதியும் இன்னும் 100 விழுக்காடு முழுமைபெறாமல் இருப்பதால், பெரும்பாலான விளையாட்டாளர்கள் பினொம் பென் தலைநகரில் உள்ள உல்லாச விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள அவலம் குறித்து ஹன்னா கருத்துரைத்தார்.

இதனால், மிகவும் சாலை நெரிசல்கள் அதிகம் கொண்ட தலைநகரம் என்பதால் மலேசிய விளையாட்டாளர்கள் அங்கிருந்து போட்டி நடைபெறும் இடத்திற்கு சரியான நேரத்திற்குள் சென்றடைவதில் பெரும் சிக்கலை எதிர்நோக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதை அவர் உறுதிப்படுத்தினார்.

இந்தப் பிரச்சனையால், நம் போட்டியாளர்கள் தத்தம் பொட்டிகளில் கொண்டுள்ள முழு கவனம் சிதராமலும், மனதளவிலும், உடல் ரீதியிலும் சிரமப்படாமல் இருக்க மலேசிய விளையாட்டு மன்றத்திலிருந்து சில அதிகாரிகள் அங்கு கடமையில் ஏற்பட்டுள்ளதாகவும் ஹன்னா உறுதிப்படுத்தினார்..

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement