புத்ராஜெயா, மே 8 -
பி40 ரக குறைந்த வசிதியுடைய இந்தியர்காளின் நல்வாழ்விற்காக இவ்வருடம் மொத்தம் ரிம39.53 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மித்ரா அமைப்பின் சிறப்புச் செயற்குழுத் தலைவர் டத்தோ ஆர். ரமணன் அறிவித்தார்.
அத்தொகையிலிருந்து ஒருபகுதி இரண்டாம், பொதுப் பல்கலைக்கழகங்களில் பயில்கின்ற இரண்டாம், நான்காம் ஆண்டு இந்திய மாணவர்களின் பகுதி நேர வகுப்புக் கட்டணத்துக்கு உதவும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
“இதனிடையே, அக்டோபர் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் தொடங்கவிருக்கு முதல் கல்வித் தவணைத் தொடங்கியதும் முதலுதவியாக தகுதியுடைய இந்திய மாணவர்களுக்கு ரிம2,000 ஐ பிஎஸ்என் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்," என்று இங்கு புத்ராஜெயாவிலுள்ள பத்திரிக்கையாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் மேற்கண்ட உதவித் தொகையைப் பெறுதற்காக மாணவர்கள் மித்ராவின் இணையத்தளத்தில் உள்ள விண்ணப்ப பாரத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம் என்றார்.
எதிர்வரும் மே 8ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் மேலும் கூறினார்.
"அதுமட்டுமின்றி, அடிப்படைக் கல்வியில் பின் தங்கியுள்ள பி40 க்குள் இருக்கும் இந்திய இளைஞர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக ரிம 10.89 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
"மேலும், கல்வி அமைச்சிடம் முறையாகப் பதிந்துள்ள தனியார் தமிழ்ப் பாலர்பள்ளிக்கான ஆரம்பக்கல்விச் சிறப்புத் திட்டத்திற்காக சுமார் 4,500 பெறுநர்கள் எதிர்ப்பார்க்கப்படுகின்றனர்.
"அவ்வகையில், ஒரு பாலர் பள்ளில் மாணவருக்குத் தலா ரிம. 200 அவர்களின் காலைச் சிற்றுண்டிக்கும் பாலர் பள்ளிக் கட்டணத்திற்கும் அப்பள்ளி உரிமையாளர்களிடம் செலுத்தப்படும், " என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தத் தொகையைப் பெற எதிர்வரும் மே 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி தன்னியார் பாலர்பள்ளி நிறுவனர்களைக் கேட்டுக்கொண்டார்.
மேலும், மீதள்ள ரிம8.64 மில்லியன் தொகை சுமார் 900 கல்லீரல் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கல்லீரல் இரத்த சுத்திகரிப்புத் திட்டத்திற்கு வாரத்திற்கு ஒருமுறையென ஒரு வருடத்திற்கு உதவுவதற்காக பயன்படுத்தப்படும் என்றார்.
"இந்த உதவியைப் பெற தகுதியுடையோர் இந்த ரிம 200 உதவி வழங்கப்படும். அதற்கான விண்ணப்பத்தை நாளை மே8ஆம் தேதி தொடங்கி ஆகஸ்டு 30ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம், என்று கூறினார்.
இதனிடையே , இந்த சிறப்புச் செயற்குழு மித்ராவிடமிருந்து நிதியுதவி பெறுபவர்கள் அதனை தவறாகப் பயன்படுத்தாமல் இருக்க அவ்வர்களின் நடவடிக்கைகளை அணுக்கமாகக் கண்காணிக்கும் என்றார்.
"சம்பந்தப்பட்ட அனைத்த நிதி பெறுனர்களும் பெறப்பட்ட தொகையை கொண்டு நன்மை பயக்கும் வகையில் பயன்படுத்துவோம் என்று கையெழுத்திட்டு ஒப்புதல் வழங்கவேண்டும்.
"ஓருவேளை அவர்கள் பெற்ற நிதியை பயன்படுத்தாவிட்டால், அதனை மித்ராவிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும்," என்றார்.
இந்த நிதியுதவித் திட்டம் கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி தொட்டங்கப்பட்டது முதல் இன்று வரை மொத்தம் 1,227 விண்ணப்ப பாரங்களை மித்ரா பெற்றுள்ளதாக ரமணன் மேலும் கூறினார்.

கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks