ரிம.300 க்கு சபா சரவாக்கிற்கு விமான டிக்கெட் - அந்தோணி லோக்


கோலாலம்பூர், மே 19 - 
சபா சரவாக் மாநிலத்திற்கு ஒருவழி பயணத்திற்காக சிறப்பு கழிவுடன் ரிம.300க்கு விமான டிக்கெட்டினை அரசாங்கம் அறிவித்தது.

புதன்கிழமையன்று அமைச்சரவை கூட்டத்தில் இவ்விவகாரம் கலந்தாலோசிக்கப்பட்டு ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அறிவித்தார்.

இந்த சிறப்பு விமானக் கட்டணம் எதிர்வரும் மே 30ஆம் தேதி சபாவில் கொண்டாடப்படவிருக்கும் காமாதான் விழா, ஜூன் 1இல்  சரவாக்கில் கவாய் பெறுவிழாவையும் முன்னிட்டு வழங்கப்படுவதாக அவர் மேலும் சொன்னார்.

"இதற்காக அரசாங்கம் மொத்தம் 17,708 விமான டிக்கெட்டுகள் ரிம.300 விற்பனைக்கு திறந்துவிடப்படும் .

"தீபகற்ப மலேசியாவிலிருந்து சபா சரவாக்கிற்கு செல்லவிருக்கும் அம்மாநில மக்கள் எதிர்வரும் 20ஆம் தேதி நள்ளிரவு மணி 12.01 தொடங்கி மாஸ், ஏர் ஆசியா, பாத்தேக் ஏர், மை ஏர்லைன்ஸ் ஆகிய நான்கு முதன்மை விமான சேவை வழங்கும் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் வழி பயண டிக்கெட்டுகளை வாங்கலாம்.

"இந்த டிக்கெட்டுகள் மூலம் சபா மாநிலத்திற்கு மே 27, 28, 29 தேதியிலும்,  சரவாக்கிற்கு மே 28, 29, 30 தேதிகளில் வான் பயணத்தை மேற்கொள்ளலாம்," என்று அவர் சொன்னார்.

"சபா சரவாக் மாநிலங்களில் கொண்டாடப்படும் இந்த இரு விழாக்காலங்களில் மக்கள் விமான டிக்கெட் அதிக விலையில் இருப்பதால் சிரமப்படுகின்றனர்.

"இந்த பிரச்சனையைக்களையவே நாங்கள் இந்த முதல் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். "ஒருவேளை, இந்த முயற்சி வெற்றி பெற்றால், எதிர்காலத்தில் இத்திட்டம்  வழிகாட்டலாக  எடுத்துக்கொள்ளப்படும்,"என்றார்.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement