மகன்களுடன் பாலியல் வல்லுறவு: 105 ஆண்டுகள் சிறையும் 12 பிரம்படியையும் எதிர்நோக்கவிருக்கும் குடும்ப மாது!
கிள்ளான், மே 15 -
பெற்ற மகன்களிடம் வலுக்கட்டாயமாக பாலியல் வல்லுறவில் ஈடுப்பட்டதோடு, அந்த அருவருக்கத்தக்க செயலை தனது கைத்தொலைபேசியின் மூலம் நிர்வாண காணொளி பதிவு செய்த குடும்ப மாது ஒருவர் இன்று காலை இங்குள்ள கிள்ளான் செஸ்ஷன் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
செஸ்ஷன் நீதிபதி ஷஃபீரா முகமட் சைட் முன்னிலையில் தமக்கு எதிராக வாசிக்கப்பட்ட நான்கு குற்றங்களையும் மறுத்து 33 வயதுடைய அந்த தனித்து வாழும் பெண் முழு விசாரணையைக் கோரினார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 105 ஆண்டுகள் சிறைத்தண்டனை, 12 பிரம்படிகள் ஆகியவை எதிர்நோக்கக்கூடும்.
அக்குடும்பமாது தனது 14 மற்றும் 12 வயது மகன்களிடத்தில் இந்த பாலியல் குற்றத்தைப் புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டார்.
முதல் குற்றப்பத்திரிக்கையின் படி, குற்றஞ்சாட்டப்பட்ட பெண் தனது 12 வயது மகனின் ஆணுறுப்பை வாயில் நுழைத்து புணர்ந்துள்ளார்.
இரண்டாவது குற்றப்பத்திரிக்கையில், அப்பெண் 14 வயது நிரம்பிய மற்றொரு மகனின் ஆணுறுப்பையும் வாயில் நுழைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டார்.
பிறகு, 14 வயது மகனின் ஆணுறுப்பை கட்டாயப்படுத்தி தனது பிறப்பு உறுப்பிற்குள் விட்டு பாலியல் வல்லுறவு கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டார்.
இந்த மூன்று குற்றங்களையும் மொழிப் பெயர்ப்பாளர் வாசித்துக் காட்டியதும், அவை நன்கு புரிவதாகச் சொன்ன அப்பெண், தாம் அவ்வனைத்துக் குற்றங்களிலும் ஈடுபடவில்லை என்று மறுத்து முழு விசாரணைக் கோரினார்.
அப்பெண் கோலசிலாங்கூர், புன்சாக் ஆலாமிலுள்ள ஜோஹான் கோர்டில் இருக்கும் தமது வீட்டில் இந்த வன்செயலில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டார்.
முதல் இரு குற்றங்களை அப்பெண் பிரிவு 14(a) 2017 சிறார் பாலியல் வன்கொடுமை சட்டத்தின்கீழ் புரிந்துள்ளாதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தமக்கெதிரான அவ்வனைத்து குற்றங்களும் நிரூபிக்கப்பட்டால், அப்பெண் ஒவ்வொரு குற்றத்திற்கும் அதிகபட்சம் 20 வருடம் கடுங்காவல் தண்டனை, பிரம்படி ஆகியவை எதிர்நோக்கக்கூடும்.
அதேவேளையில் பிரிவு 16(1) 2017 சிறார் பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ஒவ்வொரு குற்றத்திற்கும் இரு பிரம்படிகளும் வழங்க வழி வகுக்கும்.
மேலும், அப்பெண்ணிற்கு எதிராக மூன்றாவது குற்றச்சாட்டு பிரிவு 14(b) 2017 சிறார் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பிரிவில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அப்பெண் 20 ஆண்டுகள் அதிகபட்ச கடுங்காவல் தண்டனையும், பிரம்படியும் வழங்க வழி செய்யும்.
இவ்வேளையில், நான்காவதாக சுங்கை பூலோவில் அமைந்துள்ள ஓட்டலில் கடந்த 2022 ஆண்டு பிப்ரவரி 17, 18 ஆகிய தேதிகளில் சுமார் பின்னிரவு 2 மணியளவில் ஆபாசக் காணொளியைப் பதிவு செய்ய ஆணையிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
அதிகபட்சம் 30 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையையும் 6 பிரம்படியையும் வகை செய்யும் பிரிவு 5, சிறார் பாலியல் வன்கொடுமை 2017 சட்டத்தின் கீழ் இந்த வன்செயலைப் புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டார்.
இவை அனைத்து குற்றங்களும் கடுமையான செயலாகவும், பாதிக்கப்பட்டவரை தொந்தரவு செய்யக்கூடிய சாத்தியம் இருப்பதாலும், இவ்வழக்கிலிருந்து ஓடிவிடக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உண்டென்பதால் நீதிமன்றம் அப்பெண்ணிற்கு ஜாமின் வழங்க மறுத்தது.
இவ்வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 26ஆம் தேதிக்கு மறுவிசாரணைக்காக ஒத்திவைக்கபபட்டுள்ளது.
அரசாங்க துணை வழக்கறிஞர் நூருள் இஸ்ஸாதி முகமட், நூர் அயுனி ஜம்ரியும் இவ்வழக்கை பதிவு செய்தனர்.
இதற்கு முன், அப்பெண் மே 3 ஆம் தேதி தொடங்கி மேல் விசாரணைக்காக காவல் துறையால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்.
சமூக நலத் துறையிடமிருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், காவல் துறையினர் அப்பெண்ணைக் கைது செய்து, பாதிக்கப்பட்ட இரு மகன்களையும் காப்பாற்றினர்.
இதே விசாரணைக்காக அப்பெண் சுங்கை பூலோ காவல் துறையினரால் தடுத்துவைக்கப்பட்டனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks