மலேசிய பஞ்சாபி கட்சியின் திறந்த மடல்
கோலாலம்பூர், மே 22 -
தேசிய முன்னணியில் கூட்டணிக் கட்சியாக இணைவதற்கு மலேசிய பஞ்சாபி கட்சி ஆர்வம் தெரிவித்துள்ளது.
ஒலியும் ஒளியும் தமிழ் ஊடகத்திடம் பிரத்தியேகமாக பேசிய அதன் தேசியத் தலைவர் டத்தோ குர்ஜிட் சிங் ரண்டே கூறுகையில், ஒருவேளை இதற்காக அவர்கள் மேலும் 100 ஆண்டுகள் காத்திருக்கும் நிர்பந்தம் ஏற்பட்டாலும் அதற்காக அக்கட்சி பற்றுடன் அந்த சரித்திரப்பூர்வமான நாளுக்காக காத்திருக்கும் என்றார்.
இந்த பஞ்சாபி கட்சி 1986ஆம் ஆண்டு முதல் இன்று வரை தேசிய முன்னணிக்கே பக்தியுடன் ஆதரவு வழங்கி வருகிறது.
கடந்த தலைவரின் ஆட்சியில் இக்கட்சியை கூட்டணையில் இணைப்பதற்காக இதர அரசியல் கட்சிகள் முன்வந்தனர்.
"ஆயினும், தேமு கட்சியின்பால் நாங்கள் கொண்டுள்ள பற்றினாலும், என்றாவது ஒருநாள் நாங்கள் தேமுவின் கூட்டணியாக உருவெடுக்கும் வாய்பு கதவைத் தட்டும் என்ற நம்பிக்கையால் வந்த அனைத்து வாய்ப்புகளையும் நிராகரித்து விட்டோம்.
"அதுமடுமில்லாமல், எங்களின் அரசியல் அடிப்படை விதை மஇகாவின் முதல் தலைவரான பூட் சிங் அவர்கள் வடிவில் 1946 ஆண்டிலேயே தொடங்கிவிட்டது. ஆகையால் பஞ்சாபி சமூகம் மஇகாவிற்கு அந்நியர் அல்ல.
"இதனைக் கருத்தில் கொண்டு கண்டிப்பாக மஇகா தலைவர் விக்னேஸ்வரன் அவர்கள் எங்களின் கோரிக்கைக்குச் செவி சாய்த்து பச்சைக்கொடி காட்டுவார் என்று மிகப் பெரிய நம்பிக்கை வைத்துள்ளோம்.
"மஇகா போன்ற அடிப்படை பங்காளி கட்சிகள் மனது வைத்தால், தேசிய முன்னணியின் தலைவர் அகமட் ஜாஹிட் ஹமிடி கண்டிப்பாக கட்சி அரசியலமைப்பில் திருத்தம் செய்து நாங்கள் விரைவில் கூட்டணி உறுப்பியம் பெறுவதற்கு பாதை திறக்க வழிவகுக்கும்," என்று நம்பிக்கை தெரிவித்தார்.
ஒவ்வொரு முறையும் பஞ்சாபி கட்சியின் அழைப்பையேற்று மதிப்பளித்து இந்த இரவு விருந்தில் கலந்து சிறப்பித்த துணைப் பிரதமரின் பெருந்தன்மைக்கு நாங்கள் தலைவணங்குவதாக அவர் மேலும் கூறினார்.
கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks