கட்டாய மரண தண்டனை ரத்து வரவேற்கத்தக்கது - மனித உரிமை ஆணையம்


கோலாலம்பூர், ஏப்ரல் 4 -
கட்டாய மரண தண்டனையை ரத்துச் செய்துள்ள அரசாங்கத்தின் முடிவினை மலேசிய மனித உரிமை ஆணையம் வெகுவாக வரவேற்றுள்ளது.

அரசாங்கம் 11 விதமான குற்றங்களுக்கு சட்டத்தில் இடம் பெற்றுள்ள கட்டாய மரண தண்டனையை ரத்து செய்துள்ளது.

அரசாங்கத்தின் இந்த முடிவானது மலேசிய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 5இன் கீழ் மக்களின் அடிப்படை சுதந்திர தற்காப்பதற்கு நிகரான முடிவாகும் என்று அந்த ஆணையம் கூறியுள்ளது.

கட்டாய மரண தண்டனைக்குப் பதிலாக மாற்று தண்டனையை சட்டத் திருத்தத்தில் கொண்டு வருவது குறித்த ஆய்வில் ஈடுப்பட்ட அனைத்து முன்னாள் ஆணையரும்  சிறப்பு செயற்குழுவின் உறுப்பினராக செயலாற்றியதற்கு மனித உரிமை ஆணையம் பெருமை கொள்வதாக அதன் தலைவர் பேராசிரியர் டத்தோ டாக்டர் ரகமட் முகமது தெரிவித்தார்.

கட்டாய தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டது ஓர் உண்ணதமான நடவடிக்கை என்றும் சுஹாகாம் எனப்படும் மனித உரிமை ஆணையம் நம்புகிறது.

மேலும், இது சித்திரவதை, கொடூர, மனிதாபிமானமற்ற தண்டனை ஆகியவற்றை எதிர்க்கும் ஐக்கிய நாட்டு சபையின் கொள்கைக்கு நிகரான ஓர் சிறந்த நடவடிக்கை என்றும் அவர் கூறினார்.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement