வென்சுருட்டுடன் சிரித்துக் கொண்டே தேசிய கீதம் பாடிய கல்கத்தா பெண்கள் கைது


கல்கத்தா, ஏப்ரல் 17 - 
வெண்சுருட்டுடன் புகைப்பிடித்து கொண்டு சிரித்து நையாண்டி செய்து கொண்டே இந்திய தேசிய கீதத்தைப் பாடி இரு பெண்களை கல்கத்தா காவல் துறை கைது செய்துள்ளது.

இச்சம்பவம் கல்கத்தா மக்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. சம்பந்தப்பட்ட அவ்விரு பெண்களின் முறையற்ற செயல் காணொளியின் மூலம் சமூக வளைத்தலங்களில் ஊடுருவியதையடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அக்காணொளி பரவியதும், சில இந்திய குடிமக்கள் உட்பட கல்கத்தா உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஆகியோர் அப்பெண்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்தனர்.

கடந்த ஞாயிரன்று, தேசிய கீதத்தை இழிவுபடுத்தியதற்காக அவர்கள் மீது காவல் துறையினர் முதல் தகவல் குற்ற அறிக்கையை முடக்கிவிட்டனர்.

கைது செய்யப்பட்ட அவ்விரு பெண்களிடமிருந்தும் காவல் துறை வாக்குமூலம் பெற்றதாக பராக்பூர் காவல் ஆணையம் உறுதிபடுத்தியது. அவர்கள் 18 வயதுக்கு கீழ் உள்ள பெண்கள் என்றும் காவல் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், இந்த விசாரணைக்கு உதவுவதற்காக கூடுதல் ஆவண ஆதாரங்களுக்காக முகநூல் நிர்வாகத்தின் உதவியைக் கல்கத்தா காவல் தலைமையகம் நாடியுள்ளது.

சம்பந்தப்பட்ட காணொளி சமூக வலையத்தளங்களில் பரவியதைக் கண்டு அந்த இருப் பெண்களும் அதனை முகநூலிளிருந்து உடனடியாக அகற்றினர்.

அந்த காணொளியில், அந்த இரண்டு பெண்களும் கையில் வெண்சுருட்டுடன் இந்திய தேசிய கீதத்தைப் பாடினர்.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement