அறிவியல் பட்டதாரிக்கான ஆதரம் காட்டத் தவறிய வங்காளதேசப் பெண் விமானியின் மீது நடவடிக்கை


டாக்கா, ஏப்ரல் 17 -
வங்காளதேசத்தின் பொது வான்போக்குவரத்து இலாகா அதன் பெண்விமானி ஒருவரின் வானூர்தியைச் செலுத்தும் லைசன்ஸை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

பீமன் பங்காடேஷ் ஏர்லைன்ஸின் முதல் அதிகாரியாய் விளங்கும் சாடியா அகம்மது எனும் பெயரைக் கொண்ட அந்தப் பெண்னுடைய கமர்சியல் விமானி லைசன்ஸ் சலுகைகளை அனைத்தும் தற்காலிக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

அப்பெண் தாம் ஓர் அறிவியல் கல்லூரியின் பட்டதாரி என்பதை நிரூபிக்கத் தவறியதோடுமட்டுமல்லாமல் அதற்கான ஆவணங்களை முறையே கொடுக்கத் தவறியதால் இந்நடவடிக்கயை வங்காளதேச வான் போக்குவரத்து இலாகா இந்தத் தண்டனையை விதித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் நாள் தொடங்கி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்த இலாகா மேலும் கூறியது. அப்பெண் மீது நாங்கள் பணிநீக்க நடவடிக்கை எடுக்கவில்லை மாறாக அவளின் பொறுப்பற்ற செயல், கட்டொழுங்கு காரணமாக உள்கட்ட நடவடிக்கை மட்டுமே தற்போது எடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அந்தப் விமானியை நிரந்தரமாக பணிநீக்கம் செய்வது அவரின் விமானம் ஓட்டும் லைசன்ஸையும் ரத்து செய்வது குறித்து விசாரணையும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த இலாகா உறுதிப்படுத்தியது.

தற்போது அப்பெண் இருக்கும் இடம் குறித்து அந்த இலாகா எந்த ஒரு தகவல்களையும் பெறவில்லை என்று கூறியுள்ளது.

அன்மையில், அப்பெண் போலியான நற்சான்றிதழைத் தந்ததாக புகார் ஒன்று பெறப்பட்டது. இதனை அடுத்து, இந்த புகாருக்கெதிராக பதில் தரும்படி காரணம் கோரும் கடிதமொன்றை அந்த சிஏஏபி எனும் இலாகா அப்பெண்னுக்கு மின்னஞ்சலின் வழி அனுப்பியது.

அந்த கடிதத்தில் அப்பெண் விமானி தாம் ஓர் அறிவியல் பட்டதாரி என்பதை நிரூபிக்கும் முறையான ஆவணங்களை உடனடியாகச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

ஆயினும், கொடுக்கப்பட்ட தவணைக்குள் அந்த பெண் விமானி அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டதைக் கொடுக்காமல் அந்த குற்றச்சாட்டுக்கான விளக்கத்தையும் கொடுக்கத் தவறினார்.

இதன் விளைவாக, இந்த விசயத்தை விசாரித்த நடவடிக்கைச் செயற்குழு அப்பெண் விமானி மீது நடவடிக்கை எடுத்துள்ளது. இருப்பினும் அன்மையில் இவ்விலாகாவின் கடிதத்திற்கு மின்னஞ்சல் மூலம் அப்பெண் பதிலளித்துள்ளார்.

அக்கடிதத்தில் அவர் கூறியதாவது, தாம் கொடுத்துள்ள நற்சான்றிதழ் போலியல்லவென்றும் விரைவில் தாம் நாடு திரும்பியதும் முறையான ஆவணங்களைச் சமர்ப்பிக்கவிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

"நான் இப்பொது நாட்டில் இல்லை, உடல் நலக்குறைவு காரணமாக வங்காளதேசத்தை விட்டு சென்று விட்டேன் என்று அந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், அந்தப் பெண் விமானி எப்பொது இந்நாட்டை விட்டுச் சென்றார் எப்போது நாடு திரும்புவார் எனும் தகவலை அவ்விலாகா பெறவில்லை.

அதிகாரப்பூர்வ ஆவணப்படி, இடைநிலைப்பள்ளியில் மனிதம் துறையில் பயின்ற சாடியா போலி ஆவணங்களைக் காட்டி தாம் ஓர் அறிவியல் பட்டதாரி என்று அனைவரையும் ஏமாற்றியுள்ளது தெரியவந்தது.

வான்போக்குவரத்து இலாகாவின் விதிமுறைப்படி கமர்சியல் விமானி கட்டயமாக அறிவியல் துறையில் நற்சான்றிதல் வைத்திருக்கவேண்டியது அவசியமாகும். மேலும் ஒவ்வொரு விமானியும் அறிவியல் மற்றும் கணிதத்தில் சிறந்த தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயமக்கப்பட்டுள்ளது.

டாக்கா கல்வி இலாகாவிடமிருந்து பெறப்பட்ட தகவலின்படி அப்பெண் உயர்நிலைப் பள்ளித் தேர்வில் இரண்டாம் நிலையை அடைந்துள்ளார்.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement