ஷாஆலாம், ஏப்ரல் 30 -
ஹூலு யாம் மாவட்டத்தில் அமைந்துள்ள பத்து ஆற்றில் எந்த ஒரு நீர் தூய்மைக்கேடும் ஏற்படவில்லை என்று சிலாங்கூர் மாநிலம் உறுதிப்படுத்தியுள்ளது.
நேற்று இங்குள்ள சுங்கை துவாவில் உள்ள லிபூர் வனப்பகுதியிலுள்ள ஜாலான் ஊலு யாம் பாரு அருகாமையில் அமைந்துள்ள பத்து ஆற்றில் டீசல் கழிவின் தடையம், துர்நாற்றம் தூய்மைக்கேடு சம்பவம் பற்றி பொது மக்களிடமிருந்து லுவாஸ் எனப்படும் சிலாங்கூர் நீர் நிர்வாக இலாகா புகார் பெற்றது.
இந்த டீசல் கழிவு பத்து நீர் அணைக்கட்டிற்குள் களக்கும் அபாயம் குறித்தும், இதனால் நீ சுத்திகரிப்பு சிகிச்சை நடவடிக்கையைப் பாதிக்கலாம் எனும் ஐய்யப்பாடு குறித்தும் அந்த புகாரில் சொல்லப்பட்டிருந்தது.
இதன் சம்பந்தமாக முதல்கட்ட விசாரணையில், இந்த தூய்மைக்கேடு சம்பவம் கடந்த 27ஆம் தேதி காலை மணி 10 முதல் மதியம் 12 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் நிகழ்ந்துள்ளதாக நம்பப்படுகிறது.
ஆயினும் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்த நடவடிக்கைக் குழு அங்கே பார்வையிட்டபோது, டீசல் எண்ணை ஆற்றில் கலந்ததற்கான தடயங்கள் எதுவும் தென்படவில்லை.
அந்த பகுதியில் ஏற்பட்ட அடைமழையால், அந்த தடயங்கள் அனைத்தும் காணாமல் போனது.
மேலும், பத்து ஆற்றின் நீ சிகிச்சை நிலையத்தில் லுவாஸ் இலாக நடத்திய திடீர் சோதனையில் அங்கே எந்த ஒரு துர்நாற்றமும் எண்ணை கழிவு கலந்ததற்கான தடயமும் தென்படவில்லை என்று உறுதி செய்யப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் இதுபோன்ற சம்பவங்கள் விளைவை ஏற்படுத்தினால் நடவடிக்கையில் இறங்க சிலாங்கூர் நீர் வாரியமும் நீர் சிகிச்சை நிலையமும் தயார் நிலையில் இருப்பதாகவும் மாநில அரசாங்கம் இன்று வெளியிட்ட ஓர் அறிகையின் வழி இத்தகவலைக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், பத்து ஆற்றின் அருகே உள்ள புறநகர் சுற்றுலா விடுதி பகுதியில் மேற்கொள்ளப்படும் கெம்பிங்க் அருகே மேற்கொள்ளப்படும் கட்டுமான வேலையால் பத்து ஆற்றில் தூய்மைக்கேடு ஏற்படும் அபாயம் இருப்பதாக லுவாஸ் நீர் இலாகா ஒப்புக்கொண்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல், 'genset; ஒன்று அவ்வாற்றின் அருகே கண்டெடுக்கப்படுள்ளது. மேலும் அங்கே எண்ணை கசிவு ஏற்ப்பட்டதற்கான தடயமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட கட்டுமானப் பகுதியிலுள்ள உரிமையாளர் உடனே நீர் வடிகட்டும் பொருளைப் பொருத்தி ஆற்றுப் பகுதியிலிருந்து வேறுதிசைக்கு திருப்பிவிடுமாறு கட்டளையிடப்பட்டுள்ளதாக லுவாஸ் கூறியது.

கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks