கோலாலம்பூர், ஏப்ரல் 29-
ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் இஸ்மயிலை முகநுலில் இழுவுபடுத்தும் விதமாக ஒரு பதிவை வெளியிட்ட சந்தேகத்தின் பேரில் ஆடவர் ஒருவார் நேற்று சைபர் குற்றவியல் செஸ்ஷன் நீதிமன்றதில் நிறுத்தப்பட்டார்.
35 வயதுடைய முகமட் இந்திரா மூலியா அஹ்மாட் எனும் குற்றஞ்சாட்டப்பட்ட அவ்வாடவர், தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றத்தை மறுத்து வழக்கு விசாரணையைக் கோரினார்.
வேலையில்லாமல் இருக்கும் அந்த ஆடவரின் இருகைகளும் விலங்கிடப்பட்ட நிலையில் ஆரஞ்சு நிற டீ சட்டையும் அரைக்கால் கால் சட்டையுடன் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டார்.
துணை அரசு வழக்கறிஞர் வழக்கிற்கு சற்றுத் தாமதமாக காலை மணி 11க்கு வந்ததால், குற்ற்ப்பத்திரிக்கை சற்று தாமதமாக செஸ்ஷன் நீதிபதி பிரிசில்லா ஹேமாமாலினி நடராஜன் அவர்களின் முன்னிலையில் மொழி பெயர்ப்பாளரால் தாக்கல் செய்யப்பட்டது.
குற்றப்பத்திரிக்கையின் படி, குற்றச்சாட்டப்பட்ட அந்த் ஆடவர் கடந்த ஏப்ரல் 21இல் சுயநினைவோடு ஜோகூர் சுல்தானை இழிவுப்படுத்தப்படக்கூடிய தகாத வார்த்தைகளை தமது சொந்த முகநூல் முகவரியில் பதிவேற்றம் செய்துள்ளார்.
பிறர் மனதை வேதனைப்படுத்தும் நோக்கம் கொண்ட அப்பதிவினை காவல் அதிகாரியால் 23 ஆம் திகதி கொமர்சியல் குற்றவியல் துறையின் அலுவலகத்தில் மாலை சுமார் 6 மணியளவில் கண்டு பிடிக்கப்பட்டது.
இதன் மூலம் அவர் செக்ஷன் 233 (1)(ஏ) பிரிவு 1998ஆம் ஆண்டு தொலைத்தொடர்பு பல்லூடக சட்டத்தின் கீழ் இச்செயலைப் புரிந்ததாகக் குற்றச்சாட்டப்பட்டார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த ஆடவர் அதிபட்சம் ஓராண்டுகால சிறை அல்லது அதிகபட்சம் ரிம. 50,000 தண்டம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலா.
இருப்பினும், தமக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட அக்குற்றத்தை மறுத்து விசாரணைக் கோரினார். அரசு வழக்குறைஞர் நீதிபதியிடம் அவ்வாடவருக்கு ரிம. 15,000 ஜாமின் தொகை அனுமதிக்கக் கோரினார்.
இருப்பினும், தனக்கு வழங்கப்பட்ட மேல் கருணை முறையீட்டில், தான் வேலையில்லாத ஆடவன் என்றும், குடும்ப சுமை, பெரிய கடன் சுமை இருப்பதாலும், குறைந்தபட்ச ஜாமின் தொகை வழங்குமாறு மன்றாடினார்.
இருதரப்பின் வாதங்களையும் செவிமடுத்த அவர், இறுதியில் அவ்வாடருக்கு ரிம. 10,000 ஜாமின் தொகை வழங்கித் தீர்ப்பளித்தார்.
மேலும், எதிர்வரும் மே 26ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்துள்ளார். கடந்த வாரம் திங்கட்கிழமை ஏப்ரல் 24ஆம் திகதியன்று சம்பந்தப்பட்ட ஆடவர் பூச்சோங் மாவட்டத்திலுள்ள அவரது இல்லத்தில் காவல் துறையால் கைதுசெய்யப்பட்டார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் வழி, அதிகாரிகள் சம்சூங் ரக விவேகக் கைத்தொலைப்பேசியையும் ஓர் அழைப்பு அட்டையையும் கைப்பற்றினர்.
பிறகு, அந்த ஆடவரை 25ஆம் திகதி தொடங்கி மூன்று நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks