கோலாலம்பூர் ஏப்ரல் 28 -
இதோ உங்களுக்காக மீண்டும் வருகிறது நம் மண்ணின் மைந்தர்களின் நமஸ்தே ஹிப் பாப் தமிழ் வருடாந்திர இசைத் திருவிழா.
இம்முறை சற்று புதிய கருப்பொருளுடன் உத்வேகத்துடன் 36 உள்ளூர் கலைஞர்களோடு வித்தியாசமான இசை மழையை உங்களுக்காக வழங்க வருகின்றனர்.
அதுமட்டுமின்றி பலதரப்பட்ட உணவு அங்காடிகள், புகைப்பட முகப்பிடம், கண்கவர் விளையாட்டுகள் என இன்னும் பல பிரத்தியேக கேளிக்கை அங்கங்கள் பொதுமக்களுக்கென ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வருடாந்திர இசை பெருவிழா எதிர்வரும் மே 20ஆம் தேதி தலைநகரில் பழைய சைம் டார்பி கட்டிடத்தின் முன்புறத்திலுள்ள சாகர் சாலை சௌக்கிட்டில் அமைந்துள்ள சுவிட் மேமரி எனும் இடத்தில் நடைபெறும்.
இதில் பெருமைக்குறிய விஷயம் என்னவென்றால், இந்த நமஸ்தே இசை நிகழ்ச்சிக்கு தகவல் இலக்கியல் அமைச்சின் அனுமதி கிடைத்துள்ளது. ஒவ்வொரு டிக்கெட்டும் ரிம 111க்கு விற்கப்படுகிறது.
ஆர்வமுள்ளவர்கள் டிக்கெட்டினை naamastayhiphop.ubertickets.asia எனும் இணையத் தளத்தின் வழி வாங்கலாம். நமஸ்தே ஹிப் பாப் இசை விழா இதர இசை நிகழ்ச்சிகளைக் காட்டிலும் சற்று மாறுபட்டதாகும்.
இந்த நிகழ்வில் பல திறமைமிக்க உள்ளூர் கலைஞர்கள் உத்வேகமான அனைத்துலக தரத்திலான இசையை வழங்குவர் என்பது தின்னம் என்று FourOne6 நிர்வாக இயக்குனர் ஶ்ரீ ஜனார்தனன் நாயர் தெரிவித்தார்.
மேலும், இசைப்பிரியர்கள் ஒன்று கூடி இசையில் லயிப்பதை உறுதி செய்யும் பொருட்டு இந்த நமஸ்தே ஹிப் பாப் குழு தனித்துவமிக்க வருடாந்திர இசை மேடையை வழங்குகின்றனர் என்பது உண்மை என்று அவர் மேலும் பறைச்சாற்றினார்.
இந்த நிகழ்வு குறித்த மேல் விபரங்களைப் பெற பவித்திரா செல்வராஜூ அவர்களை 012-224 2511 எனும் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks