மலேசியா மடானி உதவிகள் இந்திய தொழில் முனைவர்களுக்கும் முக்கியத்துவம் தரவேண்டும்


கோலாலம்பூர் ஏப்ரல் 27- 
மலேசியா மடானி அரசாங்கம் வழங்கும் தொழில் முனைவர்களுக்கான பல ஊக்குவிப்புச் சலுகை வெள்ளோட்டத்தில் இந்திய சமுதாயத்திலுள்ள தொழில் முனைவர்களையும் பயனடையச் செய்வதில் தீவிரம் மற்றும் சிறப்பு அக்கரைக் காட்ட வேண்டும்.

சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் யூனேஸ்வரன் இந்த எதிர்ப்பார்ப்பையும் நம்பிக்கையையும் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளார்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் புறநகர் வாழ் மக்களிடத்தில் குறிப்பாக சிறு, நடுத்தர தொழில்துறையில் முனைப்பு காட்டுவோருக்கு மலேசியா மடானி அரசாங்கம் பல்வேறு ஊக்குவிப்பு உதவிகளை அறிவிப்பு செய்துள்ளது வரவேற்கத்தக்கதாகும்.

ஆயினும், இந்த உதவிகள் இந்திய சமுதாயத்திலுள்ளவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்பது எனது விருப்பம். அதிலும் புறநகர்களிலுள்ள வேலையில்லாதவர்கள், வேலை வாய்ப்புக்காக ஏங்கும் இளம் பட்டதாரிகளுக்கு இந்த உதவிகள் கொடுக்கப்பட வேண்டும்," என்று அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.

அதுமட்டுமின்றி தொழில் முனைவர் கூட்டுறவு அமைச்சின் தொழில் முனைவர்களுக்காக வழங்கப்படும் நிதி ஒதுக்கீடுகள் இனி வரும் காலங்களில் சிறு நடுத்தர தொழில் துறைகளில் ஈடுபாடு காட்டும் இளம் இந்தியர்களுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்று அவர் மலேசிய மடானி அரசாங்கத்திற்கு கோரிக்கை வைத்துள்ளார்.

2023ஆம் ஆண்டு கூட்டரசு கணக்கியல் படி கூட்டுறவு தொழில் முனைவர் மேம்பாட்டு அமைச்சின் வழி ரிம. 330 மில்லியன் தெக்கூன் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement