நோன்பை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகள், தஃபீஸ், பேச்சா தொழிலாளர்களுக்கு எஸ்.எம்.எஸ் டின் ஜுவலர்ஸ் அன்பளிப்பு
பினாங்கு, ஏப்ரல் 21 -
எதிர்வரும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு எஸ்.எம்.எஸ் டின் ஜுவலர்ஸ் உரிமையாளர் முகமட் சைப்பூடின் பின் முகமட் சிராஜுடின் மாணவர்கள், ஆதரவற்ற குழந்தைகள், பேச்சா எனும் மூன்று சக்கர வண்டி ஓட்டுநர் ஆகியோருக்கு அன்பளிப்புப் பொட்டலங்கள் வழங்கி உதவினார்.
இந்த புனித ரமஜான் மாத நிகழ்வு வெற்றிகரமாக கடந்த செவ்வாய்க்கிழமை பினாங்கில் நடந்தேறியது. பினாங்கின் முதல் துணை முதலமைச்சர் டத்தோ அகமட் ஜாகியுடின் அப்துல் ரஹ்மான் அவர்கள் வருகைத்தந்து உதவிப் பொருட்களை வழங்கிச் சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் 60 மூன்று சக்கர வண்டி ஓட்டுநர்கள், 4 தாஃபிஸ் சமயப் பள்ளி ஓர் ஆதரவற்றோர் இல்லம் ஆகியயோர் அழைக்கப்பட்டு உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன.
ஒவ்வொருவருக்கும் தலா ரிம 50 பெருமானமுள்ள உணவுக்கூடை, ரிம. 50 ரொக்கப்பணம், கூடுதலாக ரிம. 1,000 காசோலையை ஆதரவற்றோர் மற்றும் தாஃபிஸ் குழந்தைகளுக்கு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
இந்த புனித ரமஜான் உதவியால் அந்த ஏழைகளிடத்தில் மகிழ்ச்சி தலைத்தோங்கியது.
"புனிதரமஜான் மாதம் மற்றும் ஹரி ராயா பெருநாளை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் தவறாமல் ஈகை வழங்குவது என்பது எங்கள் டின் ஜுவலர்ஸின் தலையாயக் கடமையாகும்.
ரமஜான் என்பது நோன்பு இருந்து ஐம்புலன்களையும் அடங்கி நபிகள் நாயகத்தை போற்றுவது மட்டும் நின்றுவிடாது. அதற்கும் மேலாக இந்த புனித மாதத்தில் ஏழை எளியவர்களுக்கும் இல்லாதவர்களையும் அரவணைத்து அவர்களுக்குத் தேவையானதை வழங்கி கண்ணீரைத் துடைப்பதே மிகப் புனிதத் தொண்டாகும் எனவும் இதுவே இஸ்லாத்தின் உன்னதமான தத்துவம் என்றும் டின் ஜவர்லர்ஸ் உரிமையாளர் முகமட் சைப்பூடின் பின் முகமட் சிராஜுடின் குறிப்பிட்டார்.
எங்கள் டின் ஜுவலர்ஸ் இந்த புனிதப்பணியைத் தவறாமல் கடைப்பிடித்து வருவது மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.
மேலும் உதவி பெற்ற மூன்று சக்கர ஓட்டுநர் கோரணி நற்சின் காரணமாக மிக மோசமாக வருவாய் இல்லாமல் பாதிப்புக்குள்ளாகினர்.
2020ஆம் நாட்டில் கோரணி நற்சின் முதல் சில ஆண்டுகளுக்குப் பினாங்கிலும் சுற்றுப் பயணிகளின் வருகை மிகக் கணிசமாக வீழ்ந்ததைத் தொடர்ந்து அவர்கள் அன்றாட வாழ்க்கையைத் தொடர்வதற்கே அவதிப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், எங்களின் இந்த சிறு உதவியால் இந்த மூன்று சக்கர ஓட்டுநர் சமூகத்தின் சுமை குறையும் என்று நம்பிக்கை கொண்டுள்ளதோடு ஐடில்பித்ரிக்கான முன்னேற்பாடுகளைக் கவனிக்க பேருதவி புரியும் என்று நம்புகிறோம் என்று டின் ஜவர்லர்ஸ் உரிமையாளர் முகமட் சைப்பூடின் பின் முகமட் சிராஜுடின் அவர்கள் மேலும் கூறினார்.


கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks