உலகின் முதல் பறக்கும் இருசக்கர வண்டி ஜப்பானில் விற்பனைக்கு அறிமுகம்!


தோக்கியோ, ஏப்ரல் 17 -
இயந்திரம் போல இலக்கியல் நவீன உலகில் அதிவேகமாக இயங்கிக்கொண்டிருக்கும் மானுட குலத்தில் போக்குவரத்துத் துறையில் ஜப்பான் புதிய சாதனையைப் படைத்துள்ளது.


உலகின் முதல் பறக்கும் இரு சக்கர வாகனத்தை ஆசிய கண்டத்தின் பொருளாதாரத்திலும் அதிநவீன தொழில்நுட்பத்திலும் ஜாம்பாவானாகத்  திகழும் ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது ஜப்பான் அந்த பறக்கும் டிரோன் வடிவிலான மோட்டார் சைக்கிளை விற்பனைக்கான வாய்ப்பை மக்களிடத்தில் அளித்துள்ளது.


அந்த பறக்கும் மோட்டார் சைக்கிளை 465,000 பிரிட்டன் பவுன்ட் ஸ்டர்லிங்கிற்கு விலையை நிர்ணயித்துள்ளது. இதனை உலக மக்களுக்கு அறிவிக்கும் விதமாக அந்த மோட்டார் சைக்கிளை தலைக்கவசம் அணிந்து ஆடவர் ஒருவர் பறக்கும்  காணொளி ஒன்று பிரத்தீயேகமாக யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் ஒரு நிமிடம் நான்கு வினாடிகள் கொண்ட அந்த காணொளி வெளிநாட்டு செய்தி ஊடகமான தி டெலிகிராம் பதிவேற்றம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.



அந்த காணொளியைப் பார்க்கும் மக்கள் ஜப்பானின் இந்த சாதனையைக் கண்டு அந்நாடு தொழில்நுட்ப வளர்ச்சியில் என்றுமே முதன்மையாக பீடுநடை போடுவது பெருமை அளிப்பதாகப் புகழாரம் சூட்டி வருகின்றனர்.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement