இலக்கியல் பொருளாதாரத்தை துரிதப்படுத்த வாருங்கள் மைமாலில் உள்நாட்டு ரமஜான், ராயா பொருட்கள் வாங்குவோம்!


கோலாலம்பூர், ஏப்ரல் 6-
தொழில் முனைவர், கூட்டுறவு மேம்பாட்டுத் துறை அமைச்சு எதிர்வரும் ஹரி ராய பெருநாளை முன்னிட்டு தொடங்கப்பட்டுள்ள வாருங்கள் உள்நாட்டுப் பொருட்களை வாங்கலாம் எனும் நிகழ்வின் மூலம் உள்நாட்டு தொழில் முனைவர்கள் வழி ரிங்கிட் மலேசியா 2.5 மில்லியன் விற்பனையை இலக்காகக் கோண்டுள்ளது.

அவ்வமைச்சு முதன் முறையாக ஈகைப் பெருநாளை முன்னிட்டு மைமால் பேரங்கடியின் உதவியுட்ன் இலக்கியல் தளத்தின் மூலம் எந்த ஒரு கட்டணமுமின்றி இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.


கிட்டத்தட்ட 1000 தொழில் முனைவர்கள் இந்த இலக்கியல் பொருளாதார "Mari Beli Lokal - Ramadan & Raya"  எனும் கருப்பொருளைக் கொண்ட திட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

சுமார் 803 விதமான திடீர் உணவு, மலிகைப் பொருள், பெருநாள் புத்தாடை, இனிப்புப் பலகாரங்கள் போன்ற பொருட்களை விற்பனைக்காக மக்களின் பார்வைக்கு வைத்துள்ளனர்.

பொதுமக்கள் இந்த விற்பனை சந்தைக்கு வருகை தருவதோடு, சபாவிலுள்ள உள்நாட்டு தொழில் முனைவர்களின் உற்பத்திப் பொருட்களான, நீல கண் கருவாடு போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு உண்டு.


நாட்டின் புகழ்பெற்ற கலைஞர்களான Lima Waktu, 7zikr, KEKASIH by The Melvins, Aspirasi Jelita Ainina Ahmad B, Girl Republique, SamTilla, Starvendors dan Boenda ஆகியோர் இந்த சந்தை விற்பனையில் கலந்து சிறப்பிக்கின்றனர்.

மேலும் இந்த விற்பனை சந்தையை முன்னிட்டு சமூக ஊடகங்களில் பல போட்டிகள், கண்கவர் பரிசுகளும் பொது மக்கள் கலந்து பயனடைவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மைமால் பேரங்காடியில் பொருட்கள் வாங்குவதற்கான சிறப்பு பற்றுச்சீட்டும், இரண்டு ஆப்பில் ஐபேட் முதன்மை பரிசு மக்கள் வெல்லும் வாய்ப்பு உண்டு.

உள்நாட்டு பொருளை வாங்குவோம் எனும் இந்த சிறப்பு பெருநாள் சந்தைத் திட்டம் மலேசிய தொழில்முனைவர்களின் பொருட்களை வாங்குவதற்கு மக்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டதாக தொழில் முனைவர், கூட்டுறவு அமைச்சர் டத்தோ இவோன் பெனடிக் தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல் உள்நாட்டு சிறிய, நடுத்தர உற்பத்திச் சேவைகளுக்கு பேராதரவு தரும் அதே வேளையில் மலேசியாவில் சிறிய நடுத்தர தொழில் உற்பத்தியை இலக்கியல் மயமாக்கும் முயற்சிக்கு அரசாங்கம் முன்னெடுக்கும் கடப்பாடாகும் என்றார்.


தங்கள் விற்பனையை விரிவுபடுத்தி பயனுற விரும்பும் இளம் தொழில் முனைவர்கள்  உடனடியாக இந்த மைமால் இலக்கியல் விற்பனையில் பங்கேற்று  www.mymallmalaysia.my அல்லது e-mel ke contact@mymallmalaysia.my வழி பதிவு செய்துகொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

மேலும், ராயா பெருநாளுக்கான பலகாரங்கள், புத்தாடைகள், அலங்கார பொருட்கள் , இதர அத்தியாவசியப் பொருட்களைப் பெற ஆர்வம் உள்ளவர்கள் www.mymallmalaysia.my அல்லது MyMall 2.0 செயலியின் மூலம் ஆர்டர் கொடுக்கலாம். MyMall 2.0 செயலியை பொதுமக்கள் PlayStore அல்லது AppStore வழி பதிவிரக்கம் செய்துகொள்ளலாம்.



கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement