சீனாவில் யூனிடென் பல்கலைக்கழகத்தின் அனைத்துலக கல்வி மையம்


கோலாலம்பூர், ஏப்ரல் 14-
ஆசிய ரீதில் தமது கல்வி தரத்தை மேம்படுத்தும் நோக்குடன் தெனாகா நெஷனல் பல்கலைக்கழகம் அனைத்துலக கல்வி மையமொன்றை சீனாவிலுள்ள பல்கலைக்கழகங்களில் திறந்துள்ளது.

அவை முறையே, ஹுவாங்ஹி பல்கலைக்கழகம், அறிவியல் எலெக்டிரானிக், தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், சீசுவான் ஜிஞ்ஜியாங் பல்கலைக்கழகம், ஹுபெய் பல்கலைக்கழகம் ஆகியவையே அந்த நான்கு பிரசித்திப்பெற்ற உயர்கல்விக்கூடங்களாகும்.

அந்த நான்கு பல்கலைக்கழகங்களிலும் துவக்கி வைக்கப்பட்ட அனைத்துலக கல்வி மையம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் தொடங்கி யூனிடென் கல்வித் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு போதனையைத் தொடங்கும் என்று அதன் உதவி வேந்தரான, பேராசிரியர் டாக்டர் நூர் அசுவான் அபு ஒஸ்மான் தெரிவித்தார்.

இதன் மூலம், அனைத்துலக தரம், தொழில் சந்தையைப் பூர்த்தி செய்யும் யூனிடென் உயர்கல்விப் பாடத்திட்டத்தை சீனா அங்கீகரிப்பதற்குத் இதுவே தக்கச் சான்றாகும் என்று அவர் மேலும் கூறினார்.

அதுமட்டுமில்லாமல், தொழிற்சந்தையைப் பூர்த்தி செய்யும் சுமார் 96.8 விழுக்காடு யூனிடென் பட்டதாரிகள் சீன உயர்கல்வி கூடங்கள் ஆழமாக ஒத்துழைப்பை வழங்குவதற்கு உறுதியான நம்பிக்கையை விதைக்கின்றனர் என்று அவர் பெருமிதத்துடன் சொன்னார்.

மேலும், ஆய்வு கட்டுரைகளைப் பகிர்ந்துகொள்வதற்காக, யூனிடென் வெளி அலுவலகம் ஒன்றை சீன சேவை மையம், சீன கல்வி அமைச்சு ஆகியவற்றுடன் சேர்ந்து உலக புகழ்பெற்ற ஆறு பல்கலைகழகங்கலான ஹார்வர்ட், பார்சலோன மற்றும் சிங்கப்பூர் தேசியப் பல்கலைகழகம் என மொத்தம் ஆறு பல்கலைக்கழகங்களில் திறந்துள்ளது.

அதுமட்டுமின்றி சீன கல்வி அமைச்சில் முதல் அந்நிய அலுவலகம் ஒன்றைத் துவக்கிய மலேசியாவின் முதல் உயர்கல்விக்கூடம் எனும் பெருமையை யூனிடென் பெற்றுள்ளது.

இதனிடையே, கடந்த திங்களன்று இருநாடுகளின் கல்வி ஒத்துழைப்புடன் யூனிடேனும் 20 சீன பல்கலைக்கழகங்களூ சேர்ந்து மொத்தம் 20 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக பேசிய சிசுவான் ஜிஞ்ஜியாங் பல்கலைக்கழகத் தலைவர் பேராசிரியர் யான் ஷீஜிங், பெரிய அளவிலும் தொடர்ச்சியாகவும் சீனா, யூனிடென் இடையிலான இந்த கல்வி உறவு நடைபெறுவதை உறுதி செய்வதில் சீன மிக கடப்பாட்டுடன் இருக்கும் என்றார்.

இவ்வேளையில், யூனிடென் பல்கலைகழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பைத் தொடர்வதற்காக சீனா தமது மாணவர்களை வெகுவிரைவில் மலேசியாவிற்கு அனுப்பும் என்றார்.

இந்த முயற்சியின் வழி, இரு நாடுகளுக்கிடையிலான இருவழி நல்லுறவு மேலும் வலுப்படும் என்று நம்பப்படுகிறது.

இந்த கல்வி ஒத்துழைப்பு, கல்வித் உட்பட பல துறைகளில் இவ்விரு நாடுகளும் ஒத்துழைப்பது குறித்து மலேசியப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம், சீன அதிபர் சீ ஜின்பிங் இடையே அன்மையில் ஏற்ப்பட்ட சந்திப்புக்கு ஏற்ப இந்த யூனிடென் சீன இடையே உயர்கல்வி ஒத்துழைப்பு விளங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement