கோலாலம்பூர், ஏப்ரல் 2-
மேளவை உறுப்பினராகிய செனட்டர் ராஸ் அடிபா ராட்ஸி முதல் மலேசியராக 2023ஆம் ஆண்டுக்கான அனைத்துலக வீரப் பெண்மனி விருது வழங்கி அமேரிக்கா அரசாங்கத்தால் கௌரவிக்கப்பட்டார்.
உலக வல்லரசான அமேரிக்கா பெர்னாமா செய்தி நிறுவனத்தின் தலைவருமாகிய ராஸ் அடிபாவை அழைத்து அதிபரின் வெள்ளை மாளிகையில் பிரத்தியேக நிகழ்வில் இந்த கௌரவிப்பை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இவ்விருதிற்காக உலகம் முழுவதும் 60 சாதனை பெண்களை அமேரிக்கா பட்டியலிட்டு அதிலிருந்து ராஸ் அடிபா உட்பட 11 தகுதியானவர்களை அவ்விருதுக்கு தேர்ந்தெடுத்து கௌரவித்தது.
ராஸ் அடிபாவிற்கு முன்பு, ஏற்கனவே இன்னும் சில மலேசியர்களான அம்பிகா சீனிவாசன், நிஷா அயுப், சுசான்னா லியுவ் ஆகியோர் அமேரிக்க தேசிய துறையால் இவ்விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் அவ்விருது வழங்கும் சடங்கு வெள்ளை மாளிகையில் நடைபெறவில்லை. "இது எனக்கு ஓர் இன்ப அதிர்ச்சி, நான் இவ்விருது பெறுவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை, இவ்வள்வு ஏன் இது என் சிந்தனையிலும் உதித்தது கிடையாது காரணம் உலகம் முழுவதிழும் சுமார் 60 பெண்கள் இந்த விருதுக்கான தேர்வில் அம்மேரிக்காவினால் மிக அனுக்கமாக கண்கானிக்கப்பட்டனர்.'
“நீங்கள் வெள்ளை மாளிகையில் வீரப் பெண்மனிக்கான விருதை பெற்றீர்களாமே, நாங்கள் கேள்விப்பட்டது உண்மையா என்று கேட்டால், நான் ஆம் நான் வென்றேன் என்று கூறினேன்.
"பிறகு நானே என் விரலைக் கிள்ளி நடப்பது யாவும் உண்மையா என்று சரிப்பார்த்துக்கொண்டேன் காரணம் நான் விருது வென்ற நிஜத்தை இந்த நொடிவரை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
"அவ்விருதைப் பெறக்கூடாது என்பதற்காக அல்ல, ஆனால் அவ்விருது மிகவும் சிறப்புக்குறியது," என்று பெருமிதத்துடன் கூறினார்.
இவ்விருதிற்கு ராஸ் அடிபா தேர்ந்தெடுக்கப்பட்டதற்குக் காரணம் தன்னுடைய தொழிலைக் கொண்டு தொடர்ச்சியாக மனித உரிமையின் முக்கியத்துவத்தை மக்களிடத்தில் பிரசாரம் செய்ததோடு அதன் மேம்பாட்டிற்காகவும் பாடுபட்டார்.
மேலும் பல வழிகளில் மலேசியாவில் மனித உரிமை விவகாரத்தில் ஏற்படும் அத்துமீறல் மற்றும் அநீதியையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார்.
அதுமட்டுமல்லாமல், ஒட்டுமொத்த உடல் ஊனமுற்றோரோரைப் பிரதிநிதித்து மேலவை உறுப்பினராக ராஸ் அடிபா நியமிக்கப்பட்டதுவும் அவ்விருது தேர்வுக்காக பரிசீலிக்கப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks