சுபாங், ஏப்ரல் 5 -
நாட்டின் தற்காப்பு நிறுவனமான எஸ்.எம்.இ ஆர்டினன்ஸ் தொழிற்சாலையின் மொத்தம் 193 முன்னாள் தொழிலாளிகள் கடந்த ஆண்டு வேலை நிறுத்தம் செய்யப்பட்டதை அடுத்து ரிங்கிட் மலேசியா 8 மில்லியன் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தீபகற்ப மலேசியாவுன் ரசாயனம், பெட்ரோலியம் உற்பத்தி தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் அப்துல் அலிம் மன்சூர் கூறுகையில் 8 மில்லியன் இழப்பீட்டுத் தொகையைச் செலுத்த சிறு நிறுவனமான National Aerospace and Defence Industries Sdn Bhd (Nadi) க்கு 14 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்படுள்ளது என்றார்.
சம்பந்தப்பட்ட முன்னாள் தொழிலாளர்களுக்கு அந்நிறுவனம் இழப்பீட்டுத் குறிப்பிட்ட அவகாசத்திற்குள் அத்தொகையைச் செலுத்தத் தவறினால், இவ்வழக்கு நீதிமன்றத்திற்குக் கொண்டுச் செல்லப்படும் என்றார்.
"இந்நிறுவனம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யப்பட்ட 30 நாட்களுக்குள் இழப்பீட்டினை வழங்கியிருக்க வேண்டும், ஆனால் அந்நிறுவனமோ இரு தரப்பு பேச்சு வார்த்தையின் போது ஒப்புக்கொண்டது போல இழப்பீட்டை வழங்காமல் வாக்குத் தவறிவிட்டது.
“ஒருவேளை, இழப்பீட்டுத் தொகையை வழங்குவதில் பிரச்சினை ஏற்பட்டிருந்தால், நிறுவனத்தின் முதலாளி தொழில் சங்கத்தைத் தொடர்பு கொண்டிருக்க வேண்டும், இப்படி ஓடி பதுங்கியிருக்கக் கூடாது," என்று சுமார் 50 முன்னாள் தொழிலாளிகளுடன் போராட்டத்தில் கலந்துகொண்ட போது மேற்கண்டவாறு கூறினார்.
தற்காப்பு அமைச்சு தாமதமாக நிதி வழங்கியாதால் பணப் பிரச்சினை ஏற்பட்டதாகக் காரணம் கூறி இழப்பீடு வழங்காமல் ஒரு வருடம் பதுங்கியிருந்த அந்த நிறுவனத்தின் போக்கு ஏற்றுக்கொள்ள முடியாது காரணம் அது தனியார் நிறுவனமாகும்.
இழப்பீடை வழங்குவதில் நிறுவனம் மனசாட்சியில்லாமல் நடந்து கொண்டிருப்பது வேதனை அளிப்பதாக, சுமார் 33 ஆண்டுகள் தமது கணவருடன் வேலை செய்து வந்த முன்னால் ஊழியரான 50 வயதான அஸியான் இபுராஹிம் அலியாஸ் மொக்தார் கூறினார்.
"எனது சகாக்காள் 10 பேர் இழப்பீட்டுத் தொகையை பெற வாய்ப்பில்லாமல் இறந்து விட்டார்கள்.அவர்களில் சிலர் வேலை நிறுத்தம் காரணமாக ஏற்பட்ட மன அழுத்தத்தால் நாற்காலியிலேயே அமர்ந்த நிலையில் இறந்துவிட்டனர்.
"எங்கள் நிறுவனம் எங்களை ஏமாற்றியதும் நிறைய தொழிலாளார்கள் அழுத்தம் காரணமாக நோய்வாய்ப்பட்டனர்," என்று அவர் மேலும் கூறினார்.
குடுப்பச் சுமையைச் சமாளிக்க தற்போது பள்ளிக்கூடமொன்றில் பாதுகாவலராக பணியாற்றி அதில் வரும் வருமானத்தில் அன்றாட செலவினத்தைச் சமாளிப்பாதாகத் தெரிவித்தார்.
மேலும், நான்கு பிள்ளைகளுக்குத் தாயான அவர் எதிர்வரும் ஹரி ராயா பெருநாளுக்கு முன்பே தங்களுக்கு சேர வேண்டிய இழப்பீட்டுத் தொகையை முன்னாள் நிறுவனம் உடனடியாகத் தர வேண்டும் என்று மன்றாடிக் கேட்டுக்கொண்டார்.
அப்படி பெறப்படும் இழப்பீட்டுத் தொகை ஷவால் பெருநாளுக்கான முன்னேற்படுகளைச் செய்யவும், தம் பிள்ளைகளுக்குப் புத்தாடைகள் வாங்க பேருதவியாக இருக்கும் என்றார்.
பாதிக்கப்பட்ட மற்றொரு நபருமான கே.கிருஷ்ணகுமார், 49, கூறுகையில் இழப்பீடு தொகை சீக்கிரம் தரப்பட்டால் அதைக் கொண்டு தமக்கு ஏற்பட்டுள்ள மூட்டு வலிக்கான சிகிச்சை மேற்கொள்ள உதவும் என்று பரிதாபத்துடன் கேட்டுக்கொண்டார்.
முன்னாள் நிறுவனத்தால் வேலையை விட்டு நிறுத்தப்பட்டதும், சிறிது காலம் பாதுகாவலராக பணிபுரிந்ததாகத் தெரிவித்த கிருஷ்ணகுமார், காலில் ஏற்பட்ட வீக்கத்தால் நடக்க முடியாமல் சிரமத்துக்குள்ளாகி பாதுகாவலர் தொழிலையும் விட்டு விட்டு வருமானமின்றி அவதிப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
"முன்னாள் முதலாளி எங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை தந்தால்தான் நான் என் காலுக்கு முறையான சிகிச்சை பெற்று மீண்டும் நடப்பதற்கு வழி செய்ய முடியும்," என்று கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டார்.

கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks