ஆஸ்திரேலியா வெ.789 மில்லியன் போதைப் பொருள் பரிமுதல் : சுங்கத்துறை முழு விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு
வெ.789மில்லியன் போதைப் பொருள் ஆஸ்திரேலியாவுக்குக் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக முழு விசாரணை அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்கும்படி சுங்கத் துறைக்குப் பிரதமர் ஆணைப் பிறப்பித்துள்ளார்.
மலேசியாவிலிருந்து கிள்ளான் துறைமுகம் வழி கொல்கலன் மூலம் சுமார் 336 கிலோகிராம் எடை கொண்ட ஹெரொயின் வகை போதைப் பொருள் பிரிஸ்பேனுக்கு கடத்தப்பட்டது.
ஆயினும், கடந்த மார்ச் 13ஆம் தேதி இந்த கடத்தல் பொருளைப் பற்றிய தகவல் தெரிந்துக்கொண்ட ஆஸ்திரேலிய காவல் படை வெற்றிகரமாக அதனை முறியடித்தனர்.
இதனிடையே இவ்விவகாரம் தொடர்பாக முழு விசாரண அறிக்கை ஒன்றை உடனடியாக அரச மலேசிய சுங்கத் துறை சமர்ப்பிக்க வேண்டும் என்று பிரதமர் கட்டளையிட்டுள்ளார்.
"நான் 14 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளேன்.இந்த இரண்டு வாரங்களில் முழு விசாரணை அறிக்கையை சுங்கத் துறை தயார் செய்து என்னிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
"இதன்மூலம் இந்த பெரிய அளவிலான போதைப் பொருள் ஆஸ்திரேலியா வரை எப்படி கடத்தப்பட்டது என்றும் அதன் முக்கிய காரணமும் இந்த சட்டத்திற்குப் புறம்பான குற்றத்தின் திரைமறைவில் செயல்படும் 'பெரிய முதலை' அல்லது காரணகர்த்தா யார் என்பது குறித்து மலேசிய அரசாங்கம் அடையாளம் கண்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வழிவகுக்கும்.
"தற்போதுள்ள அதிநவீன தொழில்நுட்ப காலத்தில் எப்படி இதுபோன்ற பெரிய அளவிலான கடத்தல் செயல் அரங்கேறியுள்ளது என்று அதிர்ச்சியாக உள்ளது. மேலும் இந்த விசாரணையில் குற்றவியல் துறையும் இணைந்துள்ளதால், இன்னும் ஓரிருவாரங்களில் விசாரணை முடிவுக்கு வரும் என்று நம்புகிறேன் ," என்று அவர் மேலும் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை இரவன்று கெடா மாநில காவல் படையுடன் நோன்பு திறப்பு நிகழ்வின் போது இதனைத் தெரிவித்தார். இந்நிகழ்வுக்கு உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைபுடின் நசூதியோன் இஸ்மயில், தேசிய காவல் படைத் தலைவர் டான்ஶ்ரீ அக்ரீல் சானி அப்துல்லா சானி, துணைத் தலைவர் டான்ஶ்ரீ ரசாருடின் உசேன், புக்கிட் அமானைச் சேர்ந்த அனைத்து துறையின் இயக்குனர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இதுபோன்ற கடத்தல் சம்பவங்களை நாம் கடுமையாகத் தடுக்க வேண்டும்.இந்த சாம்பவம் மிகுந்த அவமானத்துக்குரியதுமட்டுமின்றி துடைத்தொழிப்பு அதிகாரிகளின் பலவீனத்தையும் கடமை தவறியதையும் காட்டுகிறது என்று தம்பூன் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்வார் ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் புக்கிட் அமான் இந்த AUD 268.8 மில்லியன் டாலர் பெருமானமுள்ள போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு தகவலை உறுதிசெய்தது.
மேலும் இதுதொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முன் புக்கிட் அமான் மோதைப்பொருள் குற்றவியல்துறை ஆஸ்திரேலிய காவல்படைத் தகவலைக் கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக அதன் செயலாளர் துணை ஆணையர் டத்தோ நூர்சிய முகமட் சாடுடின் உறுதிப்படுத்தினார்.

கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks