ஸ்பேய்ன், ஏப்ரல் 16 -
ஸ்பேய்ன் நாட்டின் மலையேறி வீராங்கனை ஒருவர் 500 நாட்கள் ஆழ் குகைக்குள் வாழ்ந்து உலக சாதனையைப் படைத்துள்ளார்.
50 வயதுடைய அப்பெண்மனி அந்த 500 நாட்களும் வெளிவுலக மனிதர்களுடன் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ளாமல் இருள் படர்ந்த அக்குகைக்குள் வாழ்ந்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, அப்பெண்மனி பாதாள குகைக்குள் தனியாக வாழ்ந்து உலக சாதனை படைக்க வேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது,
அதன் வெளிப்பாடாக, கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி சனிக்கிழமையன்று குகைக்குள் 230 அடிக்குக் கீழே இறங்கினார். அப்போது அவளுக்கு 48 வயது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமது இரண்டு பிறந்தநாட்களையும் குகைக்குள் கொண்டாடினார்.
அச்சமயம் இன்னும் ரஷ்யா-யூக்ரேன் இடையே போர் மூளாமல் இருந்தது.அதுமட்டுமின்றி இங்கிலாந்து இரண்டாம் எலிசபெர்த் ராணியாரின் மறைவும் இவர் தெரிந்திருக்கவில்லை.
அப்பெண் தன்னுடன் 1,000 லிட்டர் தண்ணீரையும் சுமார் 60க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் கொண்டு சென்றுள்ளார்.
அக்குகைக்குள் கடந்த 500 நாட்களாக வெளிச்சமின்றி இருளிலேயே தமது வாழ்க்கையைத் தனிமையாக நடத்தியுள்ளார்.
இந்த காலக்கட்டத்தில் அவர் ஒருமுறை கூட வெளியுலகத்தினருடன் தொடர்பிலோ அல்லது அவசர உதவியோ கோரவில்லை என்பது வியக்கத்தக்கது.
கடந்த வெள்ளியன்று 500 நாட்கள் குகை வாசத்தை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்து உலகச் சாதனைப் படைத்து வெளியே வந்த அப்பெண்மனி தாம் நலமுடன் இருப்பதாக உறுதிப்படுத்தினார்.
எப்படி 500 நாட்கள் இருண்ட குகைக்குள் தனியாக வாழ முடிந்தது என்று அங்கு முற்றுகையிட்ட ஊடகவியலாளர்கள் வினவியபோது, நீண்ட நாள் லட்சியத்தில் வெற்றி பெற்றதால் தமக்கு பயமோ, உடல்நலக்குறைவோ ஏற்படவில்லையென தெறிவித்தார்.
"அந்த 500 நாட்களாக அவர் கொண்டு சென்ற புத்தகங்களை வாசித்தும், நீர், உடனடி உணவுகளை உண்டும் வாழ்ந்துள்ளார். "ஆய்வாளர்கள், மனோத் தத்துவ நிபுனர்கள், குகை வள்ளுநர்கள் அனுதினமும் ரகசிய கேமிரா மூலம் என்னுடைய உரக்கம், மூலையின் நிலை, சுகாதாரம், மனநிலை குறித்து மிக நுணுக்கமாகக் கண்காணித்து வந்தனர். அவர்கள் என்னை வரவேற்க குகைக்குள் நுழைந்தபோது உறங்கிக்கொண்டிருந்தேன்.
"அவர்களின் காலடி சத்தம் கேட்டு திடுக்கிட்டு கண்விழித்து பார்த்தபோது என் முன்னே அவர்கள் நின்றிருந்தார்கள். என்னால் நம்பமுடியவில்லை. அவ்வளவு சீக்கிரமாகவா 500 நாட்களை நான் பூர்த்திசெய்துவிட்டேன்? நான் இன்னும் எல்லா 60 புத்தகங்களையும் இன்னும் படித்து முடிக்கவில்லையே என்று ஆச்சரியமாகக் கேட்டேன், "என்று பீட்ரீஸ் பிலாமினி எனும் அப்பெண் வினவினார்.
குகையிலிருந்து அப்பெண் வெளியே வந்தபோது அங்கே கூடியிருந்த பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரத்துடன் அவளை வரவேற்றனர். பிலாமினி இச்சாதனையை நிகழ்த்த தொடக்கம் முதல் பேருதவியாக இருந்த குழு அவள் 500 நாட்கள் குகைக்குள் இருளில் தனியாக வாழ்ந்து உலக சாதனைப் படைத்துள்ளதாக உறுதிபடுத்தினர்.
மேலும், குகை வாழ்க்கையின் இடைப்பட்ட காலத்தில் அவசர பட்டனை அழுத்தவும் தாம் எண்ணம் கொண்டிருக்கவில்லை என்றும் அப்பெண் ஒப்புக்கொண்டார்.
அதுமட்டுமல்லாமல், புத்தகம் வாசிப்பது மட்டுமல்லாமல், குகைக்குள் உடற்பயிற்சி, ஓவியம் தீட்டுவது, ஆடை பின்னுவது என்று பல நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறினார்.
மேலும், தனது குகை வாழ்க்கையை குறும்படமாக்க, இரு கோப்ரோ கேமிராக்களையும் உடன் கொண்டு சென்றதாகத் தெரிவித்தார்.
"ஆனால், 65ஆம் நாளில் அடியெடுத்துவைக்கும்போது, எண்ணுவதை நிறுத்திக் கொண்டதோடு, நேரம் குறித்து கணிக்க இயலாமல் போனது.
"ஆனால், இந்த 500 நாள் குகைவாசம் எனக்கு பல இன்ப நினைவுகளை என் வாழ்வில் பதிக்க உதவியுள்ளது. குகைக்குள் பறக்கும் வௌவாலும் சரி வினோத உயிரினங்களும் இயற்கை அழகின் தத்துவத்தையும் மாண்பையும் பரைச்சாற்றியது.
"இதுவே எனது வாழ்நாள் கனவாக இருக்கும்போது, அதை நான் உள்ளே (குகைக்குள்) அனுபவித்தபோது எதற்கு பயந்து கண்ணீர் விட வேண்டும், அதற்கு அவசியம் துளியளவும் எற்படவில்லை.
"பயம் என்பது மனிதனுக்கு இயற்கைதான். ஆனால் நான் சிறிதும் அச்சப்படவில்லை, அதிர்ச்சியாகவில்லை, அப்படி நடந்திருந்தால், இன்னேரம் நான் உடல் செயலிழந்திருப்பேன். மாறாக நான் அங்குள்ள இயற்கையை அனுபவித்தேன், அதனை ஒத்து வாழ்ந்தேன் என்பதுதான் உண்மை," என்று பெருமிதத்துடன் கூறினார்.
இந்த சாகசப் பெண்மனியின் சவால்மிக்க பயணம் இத்தோடு நின்றுவிடவில்லை, மாறாக, விரைவில் தமது அடுத்தக்கட்ட மலையேறுதல், குகைப் பயணம் குறித்து திட்டமிடவிருப்பதாகத் தெரிவித்தார்.


கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks