ரிம. 4.5 மில்லியன் போதைப் பொருள் ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் பதுக்கியது அம்பலம்

சொகுசு காரில் விநியோகித்த ஆடவர் கைது


கோலாலம்பூர், ஏப்ரல் 27-
ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒன்றை ரிம2,500க்கு வாடகைக்கு எடுத்து அதனை வெள்ளி 4.5 மில்லியன் பெருமானமுள்ள சுமார் 123 கிலோகிராம் எடையைக் கொண்ட ஷாபு வகை போதைப்பொருளைப் பதுக்கும் கிடங்காகப் பயன்படுத்திய போதைக் கடத்தல் கும்பலின் தந்திரம் அம்பலமானது.

அந்த சட்டத்திற்குப் புறம்பான பொருளை டொயோட்டா வெல்பையர் ரக சொகுசு காரில் கடத்தி வாடிக்கையாளற்களுக்கு விற்பதற்குக் காரணமாக இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவன் ஒருவன் காவல் துறையிடம் கையும் களவுமாகப் பிடிப்பட்டான்.

கோலாலம்பூர் காவல் படையின் போதைப் பொருள் துடைத்தொழிப்புத் துறை கடந்த 14, 15ஆம் தேதியில் நடத்திய சிறப்பு அதிரடி சோதனையின் வழி இந்த போதைக்கும்பலை முறியடித்துள்ளதாக கோலாலம்பூர் காவல்படையின் இடைக்காலத் தலைவர் துணை ஆணையர் டத்தோ யாஹயா ஒஸ்மான் தெரிவித்தார்.

சுமார் காலை 11 மணி தொடங்கி மறுநாள் அதிகாலை 4 மணிவரை செராஸ் மற்றும் அம்பாங் ஆகிய வட்டாரத்தில் போலிசார் திடீர் சோதனையை மேற்கொண்டனர்.

"அப்போது மிக பிரபலமான பேரங்காடியின் கார் நிறுத்துமிடத்தில் ஆடவன் ஒருவன் வெல்பயர் ரக சொகுசு காருடன் சந்தேகிக்கும் நிலையில் இருக்கும்போது சிறப்புப் படை சுற்றிவளைத்துப் பிடித்தனர்.

"அந்த ஆடவனுடைய சொகுசு காரின் பின் புறத்தில் மேற்கோண்ட சோதனையில், 114 கிலோகிராம் எடைகொண்ட சுமார் வெள்ளி 3.9 மில்லியன் பெருமானமுள்ள ஷாபு வகை போதைப்பொருளைக் கைப்பற்றினர்.

"பின்னர், அந்த ஆடவனிடம் மேற்கொண்ட வாக்குமூலம் வழி, அந்த சந்தேகத்துக்குறிய நபருடன் நள்ளிரவு சுமார் 12.15 மணியளவில் அம்பாங் வட்டாரத்தில் அமைந்துள்ள ஓர் ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் அடுத்தகட்ட சோதனையை நடத்தினர்.

"அதன் விளைவாக, அந்த வீட்டிலுள்ள ஓர் அறையினுள் சுமார் 135,000 வெள்ளி மதிப்புடைய 1.8 கிலோ எடைகொண்ட எக்ஸ்தசி, ஒரு லட்சம் வெள்ளி பெருமானமுள்ள 3.1 கிலோ ஷாபு, 52,000 வெள்ளி மதிப்புமிக்க எரமீன் 5 (1.3 கிலோ) போதைப்பொருள், 3 கிலோ கெத்தாமின் வகை மோதைப்பொருள் (172,000 வெள்ளி பெருமானம்) ஆகியவற்றைப் பதுக்கிவைத்தது கைப்பற்றப்பட்டது," என்றார்.

கோலாலம்பூ காவல் படைத் தலைமையகத்தில் நடைப்பெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இந்தத் தகவலைப் பகிர்ந்து கொண்டார். முதற்கட்ட சோதனையின் போது, இந்த 123 கிலோ போதைப்பொருளை தீபகற்ப மலேசியாவிலுள்ள வடமாநிலத்திலிருந்து சொகுசு காரைப் பயன்படுத்தி கொண்டுவரப்பட்டது தெரியவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல், இந்த ஆடவன் இந்த அனைத்து பொருளையும், பலத்த காவல் கண்காணிப்புக் கேமராவைக் கொண்ட அந்த ஆடம்பர குடியிருப்பில் ரிம 2,500க்கு வாடகை வீடொன்றை எடுத்து அங்கே பதுக்கிவைக்கப்பட்டது.

"பிறகு, அதனை சொகுசு காரின் மூலம் கிள்ளான் பள்ளத்தாக்கை சந்தையாகக் கொண்டு அவர்களின் வாடிக்கையாளர்களுக்கு அக்கும்பல் விநியோகிப்பது மட்டுமின்றி இதர வெளி மாநிலங்களுக்கும் கடத்தப்படுகிறது," என்றார்.

அந்த ஆடவன், எந்த ஒரு குற்றச்செயல் பின்னணியையும் கொண்டிருக்கவில்லை, தற்போது அவன் ஏப்ரல் 22ஆம் தேதி வரை 7 நாட்களுக்கு தடுப்புக் காவலில் தொடர் விசாரணைக்காக தடுத்துவைக்கப்பட்டுள்ளான்.

மேலும், இவனுடன் இன்னும் சில ஆடவர்களும் இந்த கடத்தல் கும்பலில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று காவல் துறையினர் சந்தேகிப்பதாகவும், அதன் தொடர்பாக தீவிர விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளாதாகவும் யஹயா மேலும் கூறினார்.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement