நோன்புப் பெருநாளை முன்னிட்டு 4 நாட்களுக்கு டோல் கட்டணம் இலவசம்


புத்ராஜெயா, ஏப்ரல் 18 - 
எதிர்வரும் நோன்புப் பெருநாள் அன்பளிப்பாக நான்கு நாட்களுக்கு இலவச டோல் கட்டணத்தை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மலேசிய மக்களுக்கு வழங்கியுள்ளார்.

இன்று இங்குள்ள வரது பிரதமர் துறையில் நடைபெற்ற சிறப்பு பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த இனிய அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

இந்த நான்கு நாட்களுக்கான இலவச டோல் கட்டண சலுகை நாளை 19 ஏப்ரல் தொடங்கி 20, 21 மற்றும் 24ஆம் தேதிகளில் மட்டுமே வழங்கப்படும் என்றார்.

இந்த முத்தாய்ப்பான செய்தியால் பெருநாளைக் கொண்டாடுவதற்காக தத்தம் ஊர்களுக்கு குடும்பத்துடன் பயணிக்கவிருக்கும் மலேசிய மக்கள் இந்த இலவச சலுகையின் மூலம் பயணச் செலவுக்கான சுமையைக் குறைக்கும்.

"இந்த இலவச டோல் கட்டணம் மலேசியாவிலுள்ள 33 பிரதான நெடுஞ்சாலைகளில் வழங்கப்படுகிறது," என்று அவர் பெர்டானா புத்ராவில் அறிவித்தார்.

இந்த சலுகையானது மகிழுந்து, விரைவுப் பேருந்து, மூடுந்து என அனைத்து ரக வாகனங்களுக்கும் பொருந்தும்.      

இவ்வேளையில் வழங்கப்பட்டுள்ள இச்சலுகையை, மலேசியர்கள் பயனுள்ள முறையில் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வதற்கு பெரும் பங்காற்றும் என்றார்.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement