சுமார் 375 ஆண்டுகளாகக் மாயமானதாகக் கருதப்படும் கண்டம் ஒன்றை விஞ்ஞனிகள் தற்போது கண்டுப்பிடித்துள்ளனர்.
வரலாற்றுபூர்வமாக சிலாண்டியா (Zealandia or Te Riu-a-Māui) எனும் பெயருடன் விளங்கும் அந்த கண்டம் மௌரி மொழியில் குறிப்பிடப்பட்டுள்ளது போல உண்மையிலேயே தோன்றியுள்ளாதா என்ற வதந்தி பரவலாக இருந்து வந்துள்ளது.
திஎன் செய்தியின்படி சிலாண்டியாஸ் சுமார் 1.89 மில்லியன் சதுர மைல் பரப்பளவு கொண்டதாகத் தெரியவந்துள்ளது.
கோண்டுவானா எனும் பெயருடன் விளங்கும் சூப்பர்கண்டத்தில் ஒரு பகுதியாக இந்த சிலாண்டியாஸ விளங்குவதாக அவ்விஞ்ஞானிகள் மேலும் தங்களின் கண்டுப்பிடிப்பில் அம்பலப்படுத்தியுள்ளனர்.
மேலும் இவை 500 ஆண்டுகளுக்கு முன் பெரும்பகுதி கிழக்கு அண்டார்டிகாவையும் மேற்கு ஆஸ்திரேலியாவையும் உள்ளடக்கியது என்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கு முன்பு, ஏற்கனவே 1642ஆம் ஆண்டில் டச்சு நாட்டின் தொழிலதிபரும்
கப்பலோட்டியுமான அபெல் தஸ்மான் முதன் முதலுல் இந்தக் கண்டத்தைக் கண்டுபிடித்தார் என்றும் கூறப்பட்டுவந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இந்த கிரேட் சௌத்தர்ன் கொண்டினன் கண்டத்தை வெளிக்கொணர்வதில் அவர் மிகத் தீவிரமாக முழுமூச்சுடன் ஈடுபட்டதாகத் தெரியவந்துள்ளது.
புதிய நிலப்பகுதியைக் கண்டுப்பிடிப்பதில் தோல்வி கண்டாலும் தமது கடல் பயணத்தின் போது மௌரிய சமுதாயத்தைச் சந்தித்தார்.
இருப்பினும், மௌரிய மக்கள் இவரின் வருகையை வரவேற்கவில்லை.
இருப்பினும், அம்மக்கள் அவர்களின் வசிப்பிடத்தைச் சூழ்ந்துள்ள நிலப்பரப்பைப் பற்றி சில அரிய மற்றும் முக்கியத் தகவல்களைப் அவரிடம் பகிர்ந்துள்ளனர்.
அவற்றுள் மேற்கே சூழ்ந்துள்ள பெருநிலப்பரப்பு பற்றிய தகவல்களும் அவற்றில் அடங்கும். இவை அனைத்தும் கடந்த 375 ஆண்டுகளாக மாயமாக இருந்து வந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு புவியியலாளர்கள் சிலாண்டியா எனும் புதிய கண்டத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
கோண்டுவானா பெருநிலத்திலிருந்து பிரிந்து வரும் இந்த சிலாண்டியா கண்டத்தின் தோற்றத்தை விஞ்ஞானிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இருப்பினும் இந்த கண்டம் பிரியத் தொடங்கியுள்ள காரணம் குறித்து புரியாமல் விஞ்ஞானிகள் குழப்பத்தில் உள்ளதோடு அதற்கான காரணத்தைக் கண்டறியும் முயற்சியில் தீவிரம் காட்டிவருகின்றனர்.
இந்த பெரும்பாலான புதிய கண்டம் கடலுக்கடியில் உள்ளதென்றும் இதைக் கண்டுபிடிப்பதில் ஏற்பட்டிருக்கும் காலத் தாமதம் என்பதைக் கண்டறியும் முயற்சியில் சீலாந்து அறிவியல் ஆராய்ச்சிக் கூடம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
"இதனை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை, சீலாண்டியா கண்டம் தற்போது பிரிந்து வருகிறது," என்று துல்லோச் எனும் புவியியலாளர் ஒருவர் தெரிவித்தார்.

கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks