புக்கிட் ஜாலில் அரங்கில் அனைவரையும் ரம்மியமான இசையால் மூழ்கடிக்க வருகிறார்
கோலாலம்பூர் ஏப்ரல் 28 -
சலோமியா ஆஆ… சலோமியா ஆஆ… சுண்ட கஞ்சி சோறுடா
சுடும்பு கருவாடுடா வால மீனு காலுடா வர்ற ஸ்டைல பாருட
சலோமியா ஆஆ… சலோமியா ஆஆ…
விரலோ நெத்திலி மீனு கண்ணோ காரபொடி முகமோ கெலுத்தி மீனு
மனமொ தென்னாகுனி!
இப்படி கானா பாணியில் ஒரு பெண்ணை கிராமிய நடையில் வர்ணித்துப் பாடும் தனித்துவம் கனீர் குறலோன் தேனிசைத் தென்றல் தேவாவைத் தவிர எவராலும் இயற்ற முடியாது.
1998ஆம் ஆண்டில் பிரசாந்த் மற்றும் கரன் நடிப்பில் வெளிவந்த கண்ணெதிரே தோன்றினாள் திரைப்படத்தின் மூலம் பட்டி தொட்டிகளெல்லாம் முனுமுனுக்க வைத்த இந்த வரிகள் இன்றும் பசுமையாக மனதில் இனிக்கின்றது.
தற்போது உலகம் முழுவதும் தமது இசைப் பயணத்தைத் தொடங்கியுள்ள தேவா அவர்கள் இந்த கலைப்பயணத்திற்குப் பிள்ளையார் சுழி போடும் விதமாக மலேசியாவில் தனது முதல் இசை கச்சேரியை மலேசிய இந்திய மக்களுக்காக சாரிரம் மாறாது அதே குரலில் பிரத்தியேகமாக நம்மை இசை வெள்ளத்தில் மூழ்கடிக்க வருகிறார் என்பது மற்றொரு மகிழ்ச்சியான செய்தி.
அண்மையில் ஒலியும் ஒளியும் ஊடகத்துடன் நடைப்பெற்ற பிரத்தியேக நேர்கானலில் இந்த இனிய செய்தியை இந்த நிகழ்வை தலைமைநேற்று நடத்தும் நிறுவனத்தின் உரிமையாளர் ரிஷி சரவணன் நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
80, 90ஆம் ஆண்டுகளில் உள்ள இளம் உள்ளங்களை தமது கானா பாடல்களின் மூலம் கட்டிவைத்த அவர் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலயாளம் என சுமார் 450க்கும் மேற்ப்பட்ட படங்களின் மூலம் தமது இசைவிருந்து படைத்துள்ளார்.
எதிர்வரும் ஜூன் 3ஆம் தேதி புக்கிட் ஜாலில் தேசிய விளையட்டு அரங்கில் அவரது இன்னிசை நிகழ்ச்சி உங்களை மகிழ்விக்கவிருக்கிறது. இவரது இறுதி இசை நிகழ்வு மலேசியாவில் கடந்த 1993ஆம் ஆண்டு ஷா ஆலம் மெலாவத்தி அரங்கில் நடைப்பெற்றது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இப்போது தனது உலக பயணத்தைத் தொடங்கியிருக்கும் அவர் அதனை மலேசியாவிலிருந்து தொடங்கியிருப்பது மிகவும் பெருமை அடைவதாகத் தெரிவித்தார்.
உலகிலேயே இந்தியாவிற்கு அடுத்து மலேசியாவில்தான் தமக்கு தமது இசைக்கு முகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருப்பதாக அவர் பெருமிதத்துடன் ஓலியும் ஒளியும் ஊடகத்திடம் பகிர்ந்து கொண்டார்.
இந்த இசை நிகழ்விற்கு மிகப்பெரிய இந்திய சினிமாவில் புகழ்பெற்ற பின்னணிப் பாடகர்கள் பட்டாளம் இணைந்து நம் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்கவிருக்கின்றனர்.
பாடகர் ஹரிஹரன், எஸ்.பி.பி சரண், உன்னிகிருஷ்ணன், அனுராதா ஶ்ரீராம், ஹரினி ஆகியோர் தேவாவுடன் இந்நிகழ்ச்சியில் இணையவிருக்கின்றனர்.
மேலும், இதில் முக்கிய அம்சமாக எதிர்பாராத பிரமாண்ட நடிகர் நடிகையின் திடீர் வருகையும் நிகழ வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.
ரிஷி சரவணன் மற்றும் கோவிந் சிட்டி புரோடக்சன் தோற்றுநர்களும் உள்ளூர் தயாரிப்பு நிறுவனம் உள்நாட்டு பிரபல விநியோகஸ்தர் நிறுவனமான போக்கெட் பிளே வீராவுடன் கூட்டாக இணைந்து இந்த கலை உலக வாணிபத்தில் முதன் முறையாக தேனிசைத் தென்றல் தேவாவின் நிகழ்வோடு தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை வாங்க இசைப்பிரியர்கள் முன்பதிவினை http://www.ticket2u.com.my/TTDEVA எனும் இனையத்தளத்தில் செய்து கொள்ளலாம்.




கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks