பொன்னியின் செல்வன் 2 டிரெய்லர் வெளியீடு - பேரழகி மகாராணியாய் 'குந்தவை' திரிஷா!


சென்னை ஏப்ரல் 1- 
பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தின் ட்ரெய்லர் இம்மாத இறுதியில் ஜனரஞ்சகமாக வெளியாக இருக்கும் நிலையில் அதன் ஆடியோ பாடல்கள் வெளியீட்டு விழாவிற்காக அனைவரும் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு வருகை புரிந்துள்ளனர்.

அப்போது தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை திரிஷாவும் நீல நிற சேலையில்  வருகை புரிந்திருந்தார். இதில் சிறப்பு என்னவென்றால், அங்கு பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த சிம்மாசனம் ஒன்றில் அமர்ந்து  திரிஷா போஸ் கொடுத்திருக்கிறார்.

பொன்னியின் செல்வனில் குந்தவை கதாபாத்திரமேற்று தனது அபார நடிப்பினால் உலக இந்தியர்களின் பார்வையையும் பாராட்டையும் பெற்றுள்ள அவர் அந்த சிம்மாசனத்தில் அமர்ந்தபோது பேரழகு கொண்ட பேரரசி போன்று தமது காந்த பார்வை மற்றும் தேன் சிந்தும் குருநகையால் ஜொலித்து பார்வையாளர்களைச் சொக்கவைத்தார்.


அவரைப் பார்க்கும் போது "என்ன வியப்பிது? வானிலே - இருந்திட்டதொர் மாமதி மங்கையாய்  என் எதிரே வந்து வாய்த்ததோ? - புவிக்கு ஏது இதுபோல் ஒரு தண்ஒளி! மின்னல் குலத்தில் விளைந்ததோ? - வான் வில்லின் குலத்தில் பிறந்ததோ? கன்னல் தமிழ்க் கவிவாணரின் உளக் கற்பனையே உருப்பெற்றதோ! பொன்னின் உருக்கில் பொலிந்ததோ? - ஒரு பூங்கொடியோ? மலர்க்கூட்டமோ? என்று நினைத்த உதாரன்தான் நீ யார்! என்று கவிஞர் பாரதிதாசனின் கவிதையை நம் நினைவில் நிறுத்தியது.

திரிஷா உட்பட படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் வருகை தந்து அனைவரும் அங்கு போடப்பட்டிருக்கும் சிம்மாசனத்தில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர். தற்போது அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜெயம் ரவி, திரிஷா, பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் அந்த சிம்மாசனத்தில் அமர்ந்து வீடியோ எடுத்துள்ளனர். 

இந்த பிரமாண்ட நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக நடிகர் கமலஹாசன் வருகை தந்து மேலும் நிகழ்வை மெருகூட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் எழுத்தாளர் கல்கியால் வடிவம் பெற்ற பிரம்மாண்ட நாவலான பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக்கும் முயற்சியில் மணிரத்தினம் ஈடுபட்டிருந்தார்.


இரண்டு பாகங்களாக உருவாகியிருந்த இந்த படத்தின் முதல் பாகம் சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்தில் உலகமுழுவதும் திரையீடு கண்டு சாதனைப்படைத்ததோடு தற்போது அதன் இரண்டாம் பாகம் வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது. 

படம் வெளியாக இன்னும் ஒரு மாதம் இருக்கும் நிலையில் இறுதினங்களுக்கு முன்பு ட்ரைலர் வெளியீடு கண்டது. படத்தில் இருந்து சங்க இலக்கியத் தமிழ் பாணியில் பாடகர் இளங்கோவனின் கைவன்னத்தில் அகநக என்கிற பாடலும் வெளியாகி தற்போது உலக ரசிகர்கள் ஒவ்வொரு நொடியும் முனுமுனுக்கும் பாடலாக பரவி வருகின்றது.
 
ஆஸ்கார் நாயகனாக போற்றப்படும் இசையுலக பிரம்மாவாக வளம் வரும் ஏ.ஆர்.ரகுமானின் இதயத்தை வருடி செவிகளுக்கு தேவகானமாக ரம்மியமான இசையில் படைத்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.

பாகம் ஒன்றைப் போல பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகமும் உலக சினிமா அரங்கில் முக்கியமாக இந்திய சினிமாவில் சக்கை போடு போடும் என்பது தின்னம்.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement