150 ஏழ்மை குழந்தைகளுக்குப் பள்ளிச் சீருடைகள் வாங்குவதற்கான பற்றுச்சீட்டுகளை மாண்புமிகு சாஷா வழங்கினார்


கம்பார், ஏப்ரல் 27 -
ஏழ்மையான குடும்பங்களைச் பி40ஐச் சேர்ந்த 150 குழந்தைகளுக்குப் பள்ளிச் சீருடைகள், இதர பொருட்களை வாங்குவதற்கு ரிம 150 பெருமானமுள்ள பற்றுச்சீட்டை வழங்கி மாலிம் நாவார் சட்டமன்ற உறுப்பினரின் அலுவலகம் சிறப்பித்தது.

மேலும், சுமார் 50 பி40 குடும்பங்களுக்கு அத்தியாவசியப் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வு கம்பார் மாவட்டத்தில் உள்ள டென் டென் பேரங்காடியில் நடந்தேரியது.

ஷாவால் முதல் நாள் நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் இந்தத் தருவாயில் வசதி குறைந்தோரின் நலனிலும் அக்கரை செலுத்தும் நோக்கத்துடன் இந்த உதவி நல்கப்பட்டதாக அதன் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு சாஷா அவர்கள் ஓர் அறிக்கையில் ஒலியும் ஒளியும் ஊடகத்திடம் தெரிவித்தார்.

"இந்த உதவியின் மதிப்பு சிறியதாக இருந்தாலும், தற்போதைய சவால்மிக்க பொருளாதாரச் சூழலில் சம்பந்தப்பட்ட வசதி குறைந்ததோருக்கு மிகப்பெறியதாகும்.

"இந்த உதவி பேராக் மாநில அரசாங்கத்தின் ஏற்பாட்டில் ‘Meriah Beraya Sejahtera Bersama 2030’  எனும் நிகழ்வில் வழங்கப்பட்டது" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மலேசியா மடானி பொருளாதார புரிந்துணர்வு நிலையான அரசியல் அடிப்படையில் மட்டும் ஏற்பாடு செய்யப்பட்டது அல்ல. மாறாக அஃது ஒவ்வொரு சமூகத்தினரின் ஒருமைப்பாடு புரிந்துணர்வு, கலாசாரம், பண்புகள் ஆகியவற்றைப் பிரதிபலிப்பதாகும். 


இதனை அடிப்படையாகக் கொண்டே மாலிம் நாவார் சட்டமன்ற அலுவலகம் மதம் நிற பேதமின்றி மக்களுக்கு உதவுவதற்காகப் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.

இந்த ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் தகவலைச் சரியாக மக்களிடத்தில் கொண்டுச் சேர்ப்பதில் மத பேதங்கள் ஒரு போதும் தடைக்கல்லாக இருக்கக்கூடாது.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியது போல நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒருமைப்பாடு கலாச்சாரத்தை விதைப்போம்.

அதேவேளையில், பிரதமரின் அறிவுரையை வேதவாக்காகக் கொண்டு வெறுப்பினையை அழித்து அன்பின் தத்துவத்தை பரப்புவோம் என்று சாஷா அரைகூவல் விடுத்தார்.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement