வாடிக்கையாளர்களை மகிழ்விப்பதன் வழி நானும் மகிழ்ச்சியடைகிறேன் - JL99 தோற்றுநர் டத்தோஸ்ரீ ஜேஃப் பி கே லி


கோலாலம்பூர், மார்ச் 19-
தலைநகரில் பிரபலமான ரியல் எஸ்டேட் டெவலப்பர் நிறுவனமான JL99 குழுமம், "புரோஜேக் 99 ரெஸிடென்ஸ்@கேல் நோர்த் வீடு மனை வாங்கியவர்களை சிறப்பிக்கும் வகையில் ரிம. 1.4 மில்லியனுக்கும் அதிகமான அதிர்ஷ்டக் குலுக்கல் பரிசை இன்று வழங்கியது. 

குறிப்பாக, JL99 குழுமத்தின் நிறுவனரும் தலைமை செயல்முறை அதிகாரியருமான டத்தோஸ்ரீ ஜேஃப் பி கே லி தலைமையிலான JL99 தனது நிறுவனத்தின் வழி ரிம. 490,500 மதிப்புள்ள வீடு மற்றும் இரண்டு பெர்டுவா ரக வாகனங்களான "பெர்டுவா அருஸ்" மற்றும் "பெர்டுவா மைய்வி" வாகனங்களை வழங்கி சிறப்பித்தனர்.

மேலும் அவர்களை மகிழ்ச்சிப்படுத்த ரிம. 5000, ரிம. 8000 மற்றும் ரிம. 10000 போன்ற ரொக்கப் பரிசுளும் குழுக்கல் முறையில் வழங்கப்பட்டன. 

இத்திட்டமானது இரண்டாவது முறையாக நடைபெற்றது. இதற்கு முன்பு கடந்த 2021 ஆம் ஆண்டு கோறணி நச்சின் காலக்கட்டத்தில் ரிம. 1 மில்லியன் வரையிலான பரிசுத் தொகையுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 



இதோடு மட்டுமில்லாமல் மீண்டும் ஒரு முறை இந்த அதிர்ஷ்ட குலுக்கல் முறை பரிசு வழங்கும் நிகழ்வு விரைவில் நடைபெறவுள்ளது. வாடிக்கையாளர்களை மகிழ்விப்பதன் வழி நானும் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் இது போன்ற பரிசுகளை வழங்குவதன் வழி குறிப்பாக அதில் வீடு மனையை பரிசாக வழங்குவது JL99 நிறுவனத்தின் பழக்கமாகும். இதன் வழி எங்களது நன்றியினை 1194  வாடிக்கையாளர்களுக்கு சமர்ப்பிக்கிறோம் என JL99 தோற்றுநர் டத்தோஸ்ரீ ஜேஃப் பி கே லி  தெரிவித்தார். 

பல ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் இது போன்ற அதிர்ஷ்ட குலுக்கல் முறையில் பரிசு வழங்குவது வீடு கட்டுமானத் திட்டத்தின் தொடக்கத்திலோ அல்லது முடிவிலோ செய்வது வழக்கம். ஆனால் JL99 நிறுவனத்தை பொருத்தமட்டில் 3 முறை செய்வது வழக்கம். இதைப்பற்றி அவரிடம் கேட்டப்போது, 3 முறை செய்வதால் அதிகமான வாடிக்கையாளர்களை மேலும் கவரும் அதேவேளையில் எங்களது ஒவ்வொரு இலாபத்தை எங்களின் விசுவாசமான வாடிக்கையாளர்களிடமே மீண்டும் வழங்குவது வழக்கம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். 
 
அனைத்து வெற்றியாளர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். மேலும், இம்முறை வெற்றிப் பெறவில்லை என்று கவலைப்பட வேண்டாம். நாங்கள் மீண்டும் இதுபோன்ற நிகழ்வை விரைவில் ஏற்பாடு செய்வோம். JL99 குழுமம் அனைத்து வாடிக்கையாளர்களின் திருப்தி, மகிழ்ச்சி மற்றும் பாதுகாப்புக்கு உறுதியளிப்போம். 


கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட புரோஜேக் 99 ரெஸிடென்ஸ்@கேல் நோர்த் திட்டம் 2023 டிசம்பரில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எட்டு அடி நடைபாதையுடன் கூடுதலாக ஐந்து நட்சத்திர வசதிகளுடன் கூடிய மதிப்புமிக்க வீட்டுத் திட்டத்தை நாங்கள் முடிக்க உள்ளோம், டிசம்பர் இறுதியில் வாங்குபவர்களுக்கு இது தயாராக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்," என்று அதன் தலைமை செயல்முறை அதிகாரியும் JL99 தோற்றுநருமான டத்தோஸ்ரீ ஜேஃப்  தெரிவித்தார். 

இதற்கிடையில், கோலாலம்பூர் சிட்டி ஹால் (DBKL) ஓய்வு பெற்ற விஜய லக்ஷ்மி ஸ்வாதியின் குடும்பத்தினர், 99 ரெஸிடென்ஸ்@கேல் நோர்த் இல் கிட்டத்தட்ட அரை மில்லியன் மதிப்புள்ள வீட்டினை பரிசாக வென்றனர். 

இயற்கையாகவே, நாங்கள் இன்று அதிக நம்பிக்கையுடன் வரவில்லை, மாறாக அது நம்முடையதாக இருந்தால் பிரார்த்தனை செய்யுங்கள், அதாவது அது நம்முடையது. “அதிர்ஷ்டம் எங்கள் வசம் திரும்பியதால் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள் என்பது உண்மையானது அதற்காக நாங்கள் கடவுளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.


"சந்தையில் வீட்டு விலைகள் பெரும்பாலும் அதிகமாக இருக்கிறது. சொந்த வீடு என்பது அனைவரின் கனவாகி வரும் வேளையில் எங்களுக்கு இந்த வீடு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்று விஜய லக்ஷ்மி ஸ்வாதி தெரிவித்தார். 

இங்குள்ள 99 வண்டர்லண்ட் சுற்றுத்தலத்தில் நடைப்பெற்ற இந்த அதிர்ஷ்ட குலுக்கல் நிகழ்வுக்கு குவிந்த JL99 வாடிக்கையாளர்களும் பொதுமக்களும் சுமார் 3000க்கும் அதிகமானோர் குடும்பத்தினரோடு கலந்து கொண்டனர்.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement