சேலை கண்காட்சியின் வழி மனவளர்ச்சி குன்றியோர்கள் பற்றிய விழிப்புணர்வு

மலேசிய உலக சேலை தின அமைப்பும் மனவளர்ச்சி குன்றியோர் சங்க கூட்டு முயற்சியில் சமூக நல நிகழ்வு

கோலாலம்பூர் மார்ச் 25
உலக சேலை தினத்தை முன்னிட்டு அதன் மலேசிய அமைப்பும் மனவளர்ச்சி குன்றியோர்  சங்கமும் கூட்டாக இணைந்து கலை, கலாச்சாரம் நிகழ்ச்சியை நடத்தியது. 

இந்த மாபெறும் நிகழ்வு கடந்த மார்ச் 19ஆம் தேதி தலைநகரில் அமைந்துள்ள பேங்க் ராக்யாட்டின் இரட்டை கோபுரத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த மனிதநேயமிக்க நிகழ்வுக்கு தேசிய கலை கலாச்சாரத் துறையும் இந்திய உயர் ஆணையமும் தமது வற்றாத ஆதரவைத் தெரிவித்திருந்தன. 

மலேசியாவிலுள்ள மக்களிடையே இந்திய சமுதாய பெண்களின் பரம்பரிய உடையான சேலைகளின் சிறப்பையும் அதன் மகத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மனவளர்ச்சி குன்றியோர் சங்கம் அவர்களின் செலவீனங்களை ஈடுசெய்வதற்காக் பண உதவி வழங்கவும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. 


மலேசியாவிற்கான இந்திய உயர் ஆணையர் பொம்மி ரெட்டி நரசிம்மா ரெட்டி இந்நிகழ்விற்கு வருகை தந்து சிறப்பித்தார்.

அதுமட்டுமின்றி, மேரி ஆதரவற்ற குழந்தைகள் சமூக நல அமைப்பு, லஜென்டா சிறப்பு சிறார் சமூக நல அமைப்பும் இந்த சேலை அணியும் கலாசாரப் பண்பாட்டினை கற்றுக்கொள்வதற்காக கலந்து கொண்டனர்.

மலேசிய மனவளர்ச்சி குன்றியோர் சங்கம் லாபம் சாரா அமைப்பாக 2001 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த அமைப்பு மன வளர்ச்சி குன்றியோரின் தனி உரிமையையும் மேம்பாட்டையும் பேணி காப்பதற்காக தங்களுக்கென சுய சமூகத் தன்னார்வளர்களை நாடு முழுவதும் கொண்டுள்ளது. 


இவ்வமைப்பு இதற்கென சுகாதாரம், சமூகநலம், கல்வி, தொழில்கல்விப் பயிற்சி மற்றும் தொழில் வாய்ப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகின்றது.

உலக சேலை தின நிகழ்ச்சி ஏற்பாடு செய்வதின் மூலம் கிடைக்கும் நிதியைக் கொண்டு சங்க உறுப்பினர்களுக்கு உதவும் வகையில்  PDSM சங்கத்திற்குக் கூடுதலாக தளவாட பொருட்கள், தொழில்திறன் கல்வி பயிற்சி வகுப்புகள் (vocational training courses) நடத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. 

இந்த  நவீன காலத்தில், சேலை அணிவது தற்காலத்தில் மலேசியர்களால் மறக்கப்பட்டு வருவதோடு, நவீனமாக்கப்பட்டுள்ளது. மலேசியா பல்லின மக்களின் கலை கலாசாரம் கொண்டா மாண்புமிக்க நாடாகும். 


இந்நிலையில் மக்களின் கலை, கலாச்சார, பண்பாட்டு கூறுகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது. சேலை அணிவதன் மூலம் பாரம்பரிய பண்பாட்டு அம்சங்களை பிறருக்கு அறிமுகப்படுத்த இயலும். 

மேலும், சேலை பற்றிய சிறப்பு அம்சம் என்னவென்றால், சுமார் 108 விதமாக சேலை அணியும் முறை இருப்பது உண்மையிலேயே வியப்பினை ஆழ்த்தியுள்ளது என்று WORLD SAREE DAY அமைப்பின் தலைவர் பிகே நாயர் கூறினார்.

அதுமட்டுமின்றி இந்நிகழ்வில் நடைபெற்ற கண்காட்சியில் பல வண்ணங்களில் 60க்கும் விதமான சேலைகளை அணிந்து 10 பெண்கள் சேலை அழகு ராணி போட்டியில் வளம் வந்து பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தினர்.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement