செர்டாங் மார்ச் 25-
போதைப்பொருள் உட்கொண்டு கண்டபடி சத்தம் போட்டதால் நண்பரால் வீட்டிலுள்ள ஓர் அறைக்குள் கட்டிவைக்கப்பட்ட இந்தோனேசிய ஆடவன் ஆத்திரமடைந்து அவ்வீட்டிற்குத் தீயிட்டுக் கொழுத்தினான்.
இந்த திடுக்கிடும் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 6.51 மணிக்கு பூச்சோங் பண்டார் கின்ராராவிலுள்ள கின்ராரா கோர்ட் அடுக்குமாடி குடியிருப்பில் நிகழ்ந்தது.
ஆயினும், சம்பந்தப்பட்ட அந்த அந்நிய ஆடவன் எந்த காயமுமின்றி அத்தீவிபத்திலிருந்து உயிர் தப்பியுள்ளார். அந்த ஆடவனை சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்த காவல் அதிகாரிகள் கையும் களவுமாய் அங்குள்ள மக்களின் உதவியுடன் பிடித்தனர்.
செர்டாங் மாவட்டப் காவல் துறை தலைமையகத்தின் உதவி ஆணையர் ஆ.ஆ. அன்பழகன் கூறுகையில், முதற்கட்ட விசாரனையின்போது போதைப்பொருள் உட்கொண்டதும் கண்டபடி அண்டை அயலாருக்கு தொந்தரவு தரும் வகையில் நடந்துகொண்ட அந்த அந்நிய ஆடவனை சக வீட்டிலுள்ள நண்பர்கள் ஓர் அறையில் கட்டிப்போட்டு அடைத்து வைத்துள்ளனர்.
"இதனால் சினம் கொண்ட அந்த சந்தேகத்துக்குறிய ஆடவன் கட்டை அவிழ்த்து நண்பர்களைப் பழிவாங்கும் எண்ணத்தோடு இந்த வீட்டிற்கு தீ வைத்துவிட்டான்," என்றார் அவர்.
மேலும், பிடிப்பட்ட அவ்வாடவரின் வயது 34 என்றும் சம்பவத்தின்போது அவன் போதை மயக்கத்தில் இருப்பது உறுதிபடுத்தப்பட்டது.
அவனுடன் அவ்வீட்டில் மேலும் இரு ஆண்கள், இரு பெண்கள் மற்றும் ஒரு சிறார் என ஐவர் வசித்து வருவது அடுத்தகட்ட விசாரணையின் வழி தெரியவந்துள்ளது.
தற்போது அவர்களின் நிலை குறித்து கேள்வி எழுந்துள்ளதோடு காவல் துறையினர் தற்போது விசாரணைக்கு உதவுவதற்காக அந்த ஐவரையும் தேடும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
தற்பொது போலீசார் இச்சம்பவத்தை செக்ஷன் 307 மற்றும் 435 குற்றவியல் பிரிவின் கீழ் தீவிர விசாரணையை முடக்கிவிட்டுள்ளனர்.

கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks