கோலாலம்பூர், மார்ச் 24-
நாட்டில் மின்சாரம் திருடும் குற்றச்செயல் தலைவிரித்தாடும் சூழலை ஒட்டுமொத்தமாக துடைத்தொழிக்கும் நடவடிக்கையில் தேசிய மின்சார வாரியமான டிஎன்பி நிறுவனம் அரச மலேசியப் காவல் படையுடன் கைகோர்த்துள்ளது.
இந்த இரு தரப்பின் ஒத்துழைப்பிற்கு வழு சேர்க்கும் விதமாக அன்மையில் தேசிய மின்சார வாரியம் ஆறு நான்கு சக்கர வாகனங்களையும், கைப்பற்றப்பட்ட மின்சாரப் பொருள்களை வைக்கும் 25 கொல்கலன்களையும் காவல் படையிடம் வழங்கியது.
அன்மையில் கொலாகலமாகக் கொண்டாடப்பட்ட 216ஆம் ஆண்டு காவல் தினத்தன்று புலாபோல் சதுக்கத்தில் நடைப்பெற்ற நிகழ்வொன்றில் இந்த வாகனங்கள் தேசிய காவல் படைத் தலைவர் டான்ஶ்ரீ அக்ரேல் சானி அப்துல்லா சானியிடம் உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைஃபுடின் நசுதியொன் முன்னிலையில் வழங்கப்பட்டது.
இதனை குற்றவியல் விசாரனைத் துறையின் இயக்குனருமான ஆணையர் டத்தோஶ்ரீ அப்துல் ஜாலில் ஹசானும் கண்டுகளித்தார்.
கடந்த இரு ஆண்டுகளில் அதாவது நவம்பர் 2020 தொடங்கி கடந்த பிப்ரவரி 2023 வரையில் நாடு முழுவதும் சுமார் 1,600 சோதனைகள் நடத்தி அதன் மூலம் அரசாங்கத்திற்கு ஏற்படவிருந்த 278 மில்லியன் வெள்ளி நஷ்டம் தடுக்கப்பட்டது.
டிஎன்பி வாரியத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாருமான டத்தோ இந்திரா பஹரின் டீன் கூறுகையில், காவல் படையுடனான கூட்டு முயற்சியானது மின் திருட்டினை ஒழிப்பதில் அரசாங்கத்திற்கு மிகப்பெறிய பலனைத் தந்துள்ளது என்றார்.
அதிலும் முக்கியாமாக கிரிப்தோ நாணயம், பிட்கொய்ன் ஆகியவற்றால் பயனீட்டாளர்கள் நஷ்டம் அடைவதை தடுக்கப்பட்டது.
இந்த துடைத்தொழிப்பு நடவடிக்கையை துரிதப்படுத்தும் பொருட்டு 6 நான்கு சக்கர வாகனம் (4x4) மற்றும் 25 கொல்கலன்கள் போலீசாருக்கு வழங்கப்பட்டது.
இந்த நடவடிக்கையின் மூலம் மின்சாரம் திருட்டை ஒழிப்பதோடு மட்டுமின்றி அடிக்கடி மின்சாரத் தட்டுப்பாட்டை எதிர்நோக்கும் பயனீட்டாளர்களின் பிரச்சனைக்கும் ஒரு தீர்வு காணமுடியும் என்றார்.

கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks