கோலாலம்பூர், மார்ச் 20-
அரச மலேசிய போலீஸ் படையின் 216 ஆவது நினைவு நாள் கொண்டாட்டத்திற்கு இம்முறை மாட்சிமைத் தங்கிய மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லா ரிஆயத்துடின் அல் முஸ்தபா பில்லா ஷா மற்றும் அவர்தம் துணைவியார் பேரரசியார் துங்கு ஹஜ்ஜா அஸீசா அமீனா மைமுனா இஸ்கந்தாரியா தம்பதிகளின் வருகை வரலாற்றுப்பூர்வ நிகழ்வாக அமைந்துள்ளது.
அவர்களது வருகை நாட்டின் பாதுகாப்பையும் சுபிட்சத்தையும் பேனிக் காப்பதில் அப்பாதுகாப்புப் படைக்கு மேன்மேலும் உந்துதலாகவும் உற்சாகத்தையும் அளித்துள்ளது.
மேலும் இந்த கோலாகல நிகழ்வுக்கு பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் அவர்தம் துணைவியார் டத்தோஶ்ரீ டாக்டர் வான் அஸீசா வான் இஸ்மாயில் அவர்களின் வருகையும் நிகழ்ச்சிக்கு மேலும் மெருகூட்டியுள்ளதாக வர்ணிக்கப்படுகின்றது.
இந்நிகழ்வில் கலந்துச் சிறப்பித்த உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைஃபுடின் நசுதியோன், பொதுவாகவே போலீஸ் தினத்தை ஒவ்வொரு ஆண்டும் பிரதமர் மட்டுமே வருகைத் தந்து தொடக்கி வைப்பது வழக்கமாகும்.
'இதற்கு முன்னரும் மாமன்னர் தம்பதிகள் வருகை நடந்தேறியது ஆனால் அவை ஒவ்வோர் ஆண்டும் கிடையாது, ஆனால் இம்முறை பேரரசரும் பேரரசியாரும் முதன் முறையாகக் கலந்து சிறப்பிப்பது வழக்கத்தில் இல்லாத ஒன்றாகும்.
'இந்த வாய்ப்பு ஒட்டுமொத்த போலீஸ் படைக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவமாகும், இதன் பிறகு நாட்டின் பாதுகாப்பைபையும் மாண்பையும் பேணித் தற்க்காப்பதில் போலிஸ் படை தீவிரமாகவும் உற்சாகமாகவும் செயல்படுவதற்கு வழிவகுக்கும் என்று நான் திடமாக நம்புகிறேன்,' என்றார் அவர்.
தேசிய கிதம் ஒலிபரப்பின் போது அரச மலேசிய போலீஸ் படையின் ஹெலிகாப்டர் ஜாலூர் கெமிலாங் தேசியக் கொடியுடன் வானில் பறந்து வீர வணக்கம் செலுத்தியது.
பிறகு போலீஸ் படையிலுள்ள 12 பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளின் அணிவகுப்பும் கே9 எனப்படும் போலீஸ் படை 18 நாய்கள், குதிரைகள் மற்றும் வாகனங்களும் அணிவகுத்துச் சென்றது வருகையாளர்களின் கைதட்டலை வாரிக் குவித்தது.
தலைநகரிலுள்ள போலீஸ் பயிற்சி நிலையத்தில் இம்முறைக் கொண்டாடப்பட்ட போலீஸ் தினத்தில் சிறப்பு அம்சமாக 10 ஆண்டுகளுக்கு முன்னர் லாஹாட் டத்துவில் ஏற்பட்ட சூலு தீவிரவாதிகளின் தாக்குதலில் நாட்டைத் தர்க்காக்கும் முயற்சியில் ஈடுபட்டு வீர மரணம் எய்திய இரு காவலர்களை நினைவு கூறும் விதத்தில் மறு அரங்கேற்றம் செய்யப்பட்டது.
அப்போது இந்த சிறப்பு நிகழ்வைக் கண்ட பார்வையாளர்கள் முக்கியமாக பேரரசியாரும் பிரதமர் அன்வார் இப்ராஹிமும் துக்கம் தாங்காமல் கண் கலங்கினர்.
பின்பு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சைஃபுடின், அரசாங்கம் போலிஸ் படையினரின் நலனில் முக்கியமாக ஊதியம் மற்றும் பாதுகாப்பான வீடமைப்புத் திட்டத்திலும் அதிக ஈடுபாடு செலுத்தி வருவாதாகக் கூறினார்.
காவல் அதிகாரிகளின் சமூக நலனில் அரசாங்கம் எப்போதும் தனி அக்கறை மற்றும் கவனம் செலுத்தி வருகின்றது என்பதுதான் உண்மை. போலீஸ் படையினரின் விவகாரங்களை ஒவ்வொரு தருணமும் அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
காலம் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்பவும் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் சவால் தரும் வகையில் அதிகரிக்கும் குற்றச் செயல்களைக் களைவதில் போலீஸ் படையினர் புதிய அதிநவீன ஆயுதங்களுடன் செயல்படுவதையும் வருங்காலத்தில் அரசாங்கம் மிக கவனம் செலுத்தும் என்றார்.
அந்நிகழ்வில் தேசிய மின்வாரியம் இலாகா நாட்டில் நடக்கும் மின்சாரத் திருட்டு செயல்களைக் களைவதற்காக போலீஸ் படைக்கு நான்கு சக்கர வாகனங்களை அன்பளிப்பாக வழங்கியது.




அருமை. நல்ல கடடுரைகள் தொடரட்டும். மக்களுக்கு தெளிவு பிறக்கட்டும். வாழ்த்தகள்
பதிலளிநீக்குNandri Anna
நீக்கு