மைபிபிபியின் கட்சி தேர்தல் இன்று சட்டப்பூர்வமானதே - எம்.கேவியஸ்



கோலாலம்பூர் மார்ச் 18-
இன்று நடைப்பெற்ற 2023 - 2028 ஆம் ஆண்டுக்கான மைபிபிபியின் உச்சநிலை செயற்குழுவின் மறுத்தேர்தல் மற்றும் மாநாடு முறையே சட்டப்பூர்வமாக நடத்தப்பட்டது என்று புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதன் தலைவர் டான்ஶ்ரீ எம். கேவியஸ் உறுதிபடுத்தினார்.

கடந்த அக்டோபர் மாதம் 16ஆம் தேதி மலேசிய சங்கப்பதிவு அமைப்பிடமிருந்து பெறப்பட்ட அனுமதிக் கடிதத்திற்கு ஏற்ப இந்த கட்சியின் ஆண்டுக் கூட்டமும், தேர்தலும் நடத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.

கட்சியின் தலைவர் பதவி தோடங்கி, மூன்று உதவித் தலைவர்கள், மற்றும் 18 மத்தியச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் முறையே கட்சியின் 1,500 பேராளர்களால் இந்த தேர்தலின் மூலம் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கூறினார்.

மேலும் மற்ற சில போட்டியாளார்கள் வேரொரு கட்சியில் அல்லது இயக்கங்களில் அங்கம் பெற்றுள்ளதால் அவர்கள் இம்முறை போட்டியிடும் தகுதியை இழந்தனர்.


இவை அனைத்தும் தேர்தலைப் பார்வையிட்ட சுயேட்சை சட்ட ஆலோசகர் கட்சியின் சட்டவிதிமுறையில் உள்ள விதிமுறையை பேராளர்களுக்கு விளக்கினார்.

இவ்வேலையில், கட்சியில் அங்கத்துவம் பெறாத மற்றொரு சாரார் வெளியே சட்டத்திற்குப் புறம்பாக மற்றுமொரு மைபிபிபி என்ற பெயரில் மாநாட்டையும் தேர்தலையும் நாலை ஞாயிறன்று உலக வாணிப மையத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதை வன்மையாகக் கண்டித்தார்.

மேலும் கூறிய அவர், மெக்லின் டி க்ரூஸ் தலைமையிலான அந்த நபர்களின் செயல் கட்சியில் சட்டவிதிமுறைக்கு எதிரானதாகக் குறிப்பிட்டார்.

விதிமுறை 36.1.1 படி எந்த ஒரு கட்சியின் உள் விவகாரங்களையும் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லும் நபர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் தகுதியை இழந்ததாகும்.

அவ்வகையில் அவர்கள் யாவரும் உறுப்பினர் தகுதியை இழந்ததால் அவர்கள் நடத்தும் எந்த ஒரு கட்சி சார்ந்த மாநாடும் தேர்தலும் சட்டப்பூர்வமானது அல்ல.மாறாக அச்செயல் கட்சியின் சட்டதிட்டங்களுக்குப் புறம்பானதாகும் என்றார்.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement