கோலாலம்பூர், மார்ச் 15-
‘மடானி’ பட்ஜெட்டின் சாரம்சங்களை தீவிரமாகப் பகுப்பாய்வு செய்வதோடு, அதன்வழி மக்களின் பிரச்சினைகளை நியாயமாகவும் திறமையோடும் கையாள்வதற்கு உதவுமாறு கெஅடிலான் நாடாளுமன்ற உறுப்பினர்களை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம் கேட்டுக் கொண்டார்.
நேற்று முன்தினம் நாடாளுமன்ற கட்டடத்தில் மதிய உணவுக்கு அவர் கெஅடிலான் எம்.பி.களை அழைத்து கலந்துரையாடினார்.
அரசாங்கம் இலக்கு வைத்திருக்கும் தரப்பினருக்கும் பொது மக்களுக்கும் மடானி பட்ஜெட்டின் நன்மைகள் அனைத்தும் சென்றடைவது உறுதிச் செய்யப்படுவதற்கு இத்தகைய நடைமுறை மிக முக்கியமாகும் என்று அவர் சொன்னார்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினரின் பங்களிப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும் டத்தோஶ்ரீ அன்வார் விளக்கமளித்தார்.
இக்கலந்துரையாடலில் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன், சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் யூனேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks