புத்ராஜெயா வழி எம்.ஆர்.டி ரயில் சேவையால் நெரிசல் குறையும்


புத்ராஜெயா - எதிர்வரும் மார்ச் 16ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படவிருக்கும் இரண்டாம் கட்ட எம்.ஆர்.டி ரயில் சேவை கோலாலம்பூர் நோக்கிச் செல்லும் பிரதான சாலை மற்றும் நெடுஞ்சாலைகளில் ஏற்படும் கடுமையான நெரிசலைக் குறைக்கும் என்று அரசாங்கம் நம்பிக்கைக் கொண்டுள்ளது.

அன்மைய காலமாக புத்ராஜெயா மற்றும் சிரம்பானிலிருந்து  தலைநகரத்திற்கு செல்லும் மக்கள் முக்கியமாக மாஜு நெடுஞ்சலை மற்றும் சுங்கை பிசி நெடுஞ்சாலையில் மிக மோசமான சாலை நெரிசலை எதிர்நோக்குகின்றனர்.



இந்த நெரிசல் காரணமாக அன்றாடம் வேலைக்கு தாமதமாகச் செல்லும் சங்கடத்திற்கு மக்கள் உள்ளாகின்றனர்.

கம்போங் பத்துவையும் சென்ட்ரல் புத்ராஜெயாவையும் இணைக்கும் சுமார் 40.2 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த இரண்டாம் கட்ட எம்.ஆர்.டி சேவை, சில மக்கள் கூட்டம் அதிகமாகப் புழங்கும் இடங்களான சுங்கை பிசி, சான் சோவ் லின் மற்றும் அம்பாங் பார்க் நிலையங்களை இணைக்கின்றது.

மேலும், லானா ஜெயா எல்.ஆர்.டி இலகு ரயில் நிலையம், காஜாங் எம்.ஆர்.டி மற்றும் மோனோரேல் நிலையங்களுக்கான வழி மாற்ற சேவையும் இதில் இணைக்கப்பட்டுள்ளது.

புத்ராஜெயா எம்.ஆர்.டி சேவை ஒட்டுமொத்தத்தில், கவாசா டமன்சாராவிலிருந்து புத்ராஜெயா சென்ட்ரல்க்கான சுமார்  57.7 கிலோமேட்டர் தொலைவின் வழி ஒன்பது சுரங்க நிலையம் உட்பட 36 ரயில் நிறுத்தும் நிலையமும் 46 ரயில் பயணிகள் பெட்டிகளும் உள்ளடக்கியுள்ளது.

இன்று புத்ராஜெயா வழிக்கான நேரடி பார்வையில் ஈடுபட்ட எம்.ஆர்.டி கார்ப்பரேஷனின் தலைமை நிர்வாக அதிகாரியான டத்தோ முகமட் ஜாரிப் ஹஷிம், புத்ராஜெயா வழிப்பாதையில் இயக்கப்படும் அனைத்து ரயிலும் மனித உதவியின்றி தானாகவே இயக்கப்படுகின்றது என்றார்.



மேலும், அதி தொழில்நுட்பமான இந்த தானியங்கி முறை அதிநவீனத் தொழில்நுட்பத்துடன் சுங்கை பூலோவிலுள்ள பிரதான கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்து கண்கானிக்கப்படுவாதாகக் கூறினார்.

'இந்த தானியங்கி முறையைப் பயன்படுத்தும்போது, ஒரு ராபர்ட்டை இயக்குவது போல, இந்த தொழில்நுட்பத்தை கட்டுப்பட்டு நிலையத்தில் இருந்து கண்கானிக்கும் நபர் உயர் திறன் வாந்தவராக இருப்பதை உறுதி செய்வது மிக அவசியமாகும்,' என்றார்.

முன்னதாக சில ஊடகவியலாளர்கள் புத்ராஜெயா சென்ட்ரலிலிருந்து கோலாலம்பூர் பெரிய மருத்துவமனைக்கும்  சுமார் ஒரு மணி 15 நிமிட இருவழி பயணத்தை மேற்கொண்டு தங்களின் அனுபவத்தைப் பகிர்ந்துக்கொண்டனர்.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement