அதிகமான வர்த்தக வாய்ப்புகளை உருவாக்க ரிஸான் ஜீவல்லரி வழிவகுக்கும்" ரிஸான் நிர்வாக இயக்குனர் ஷனூப் பிபி



கோலாலம்பூர், மார்ச் 12-
துபாயில் பிரபலமான தங்க நிறுவனமான ரிஸான் ஜீவல்லரி ஆசியான் நாடுகளில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் வகையில் மலேசிய தலைநகரிலுள்ள ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் தங்களது கிளை நிறுவனத்தைத் நேற்று அதிகாரப்பூர்வமாக திறப்பு விழாக் கண்டது. 

இத்திறப்பு விழாவினை ஜாலான் மஸ்ஜித் இந்தியா மசூதியின் இமாம் எஸ்.ஏ ஷேட் இப்ராகிம் அல்-புக்காரி எம்.ஏ மற்றும் நடிகரும் பிக் பாஸ் 6 தொலைக்காட்சி நிகழ்ச்சியின் வெற்றியாளரான முகமட் அஸீம் ஆகியோர் திறந்து வைத்து சிறப்பித்தனர். 

துபாயில் வெற்றிகரமாக செயல்பட்டுவரும் ரிஸான் ஜீவல்லரியின் மலேசிய வரவு மக்களுக்கு உலகத் தரத்திலான புதிய வடிவமைப்புகளுடன் கூடிய தங்க நகைகளும் தங்க முதலீட்டு வாய்ப்புகளையும் ரிஸான் ஜீவல்லரி வழங்கவுள்ளது. 


இலாபகரமான மலேசிய தங்கச் சந்தையில், குறிப்பாக ஏற்றுமதித் துறையிலுள்ள வாய்ப்புகளை ரிஸான் ஜீவல்லரி குறி வைத்துள்ளது. மொத்த மற்றும் சில்லறை விற்பனை துறைகளில் தங்கக் கட்டிகள், தங்கக் காசுகள் மற்றும் நகைகள் பரிவர்த்தனை வாயிலாக நாட்டின் தங்கச் சந்தையில் முத்திரை பதிக்க ரிஸான் ஜீவல்லரி திட்டமிட்டுள்ளது. 

துபாயில் தனது தலைமையகத்தை கொண்டு இயங்கி வரும் ரிஸான் ஜீவல்லரி இந்த மலேசிய கிளையின் வாயிலாக ஆசியான் நாடுகளின் வாடிக்கையாளர்களை தேவைகளை பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளது. 

சிறப்பான வேளைப்பாடுகளுடனான தங்க நகைகள் மட்டுமின்றி தங்கத்திலான பொருட்கள் மற்றும் முதலீட்டு திட்டங்களையும் ரிஸான் கொண்டுள்ளது. துபாயில் இயங்கி வரும்  இதன் தலைமை நிறுவனம் ஜிசிசி நாடுகள் மற்றும் இந்தியாவில் தயாரிப்பு , சுகாதாரம், சொத்து மற்றும் நிறுவன சேவைத்துறைகளில் ஈடுப்பட்டு வருகின்றது.


13 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு 20,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள ரிஸான் ஜீவல்லரி மலேசிய சந்தையில் தனது தடத்தை பதித்துள்ளது. 

"இங்குள்ள வர்த்தகத்தை மேலும் அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லவும் இங்கு மேலும் அதிகமான வார்த்தக வாய்ப்புகளை உருவாக்கவும் ரிஸான் ஜீவல்லரி வழிவகுக்கும்" என நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஷனூப் பிபி குறிப்பிட்டார். 

தங்கச் சந்தையில் ஒரு மொத்த விற்பனையாளராக ஆரம்பித்து இன்று தனக்கான முத்திரைப் பதித்துள்ள ரிஸான் வர்த்தகத்தில் நாணயம் , நேர்மை ஆகிய கொள்கைகளை முன்னிறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. நேர்மையான முறையில் தங்கம், இரத்தினக் கற்களை கொள்முதல் செய்வதுடன், தங்க வர்த்தகத் துறையில் வெளிப்படைத்தன்மை ஓங்குவதற்கான புதிய முயற்சிகளையும் எடுத்து வருகின்றது.

இலகுவான அணுகுமுறையும் முறையான செயல்முறையின் வாயிலாக துபாய், ஷர்ஜா, அபு தாபி பகுதிகளில் முதன்மை அங்கீகாரம் பெற்ற தங்க முகவராக திகழும் ரிஸான் ஜீவல்லரி, மலேசியாவிலும் அந்த அங்கீகாரத்தைப் பெற நம்பிக்கை கொண்டுள்ளது. 


"வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்து, தரமான நகைகளையும் சேவைகளையும் நீண்டக் கால வார்த்தக தொடர்பினை வலுப்படுத்துவதே ரிஸான் ஜீவல்லரியின் வெற்றிக்கு அடித்தளமாக விளங்குவதாக ஷனூப், எச். ஹூசேன், எச். ஜமீல் , எச். கலைமகன் முபாராக் தெரிவித்தனர். 

மேலும், "வாடிக்கையாளர்கள் தங்களின் தங்கத்தை விற்க எண்ணினால், சந்தையில் சிறந்த மதிப்பு மற்றும் உடனடி பரிவர்த்தனை வழங்க நாங்கள் தயார் " என ஷனூப் மேலும் குறிப்பிட்டார்.

ரிஸான் ஜீவல்லரியின் மின் பரிவர்த்தனைத் தளத்தை அனைத்துலக வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement