தேவாலயத்திற்கு வாருங்கள் : இதுவரை ஐவரிடம் போலீஸ் வாக்குமூலம்


கோலாலம்பூர், மார்ச் 21- 
வாருங்கள் தேவாலயத்திற்குச் செல்வோம் எனும் நிகழ்ச்சி இஸ்லாமி இளையோரை பாதிக்கும் என்ற சர்ச்சை வெடித்ததன் காரணமாக அவ்விசாரணைக்கு உதவும் வகையில் போலீசார் இதுவரை ஐவரிடம் வாக்குமூலம் மேற்கொண்டுள்ளனர்.

செந்துல் மாவட்ட உதவி ஆணையர் பே எங் லாய் கூறுகையில், தற்போது இவ்விசாரணை தொடர்பிலான குற்ற அறிக்கை இறுதிக்கட்ட ஆய்வில் இருப்பதாகத் தெரிவித்தார்.

கூடிய விரைவில் அந்த விசாரணை அறிக்கை நிறைவு செய்து துணை அரசு வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அடுத்தகட்ட நடவடிக்கைக்காக அனுப்பிவைக்கப்படும் என்றார்.

'இதுவரையில் இந்த பிரச்சனை தொடர்பாக ஐவர் அழைக்கப்பட்டு அவர்களிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டது. அவர்களில் இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா இயோவும் அடங்குவர்,' என்றார்.

நேற்று திங்களன்று, சுமார் மாலை 5.30 மணியளவில் செகாம்புட் நாடாளூமன்ற உறுப்பினருமான ஹன்னா தனது வழக்கறிஞர் சங்கீத் கோருடன் செந்தூல் மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு வருகை தந்தார்.

அவர் போலீஸ் விசாரணைக்கு உதவுவதற்காக வாக்குமூலம் தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement