அடைமழையினால் சுங்கை பூலோவிலுள்ள குறிப்பிட்ட சில வீடமைப்புப் பகுதிகளில் திடீர் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்கள் வெள்ள நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று காலை கம்போங் மெர்பாவ் செம்பாக்கில் நிலவரத்தை நேரில் கண்டறிந்த சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான அவசர உதவிகள் முறையே வழங்கப்படுவது உறுதிச் செய்யப்படும் என்றார்.
மேலும், அவர்களின் சமூக நலன் தொடர்ந்து பாதுகாக்கப்படும் என குறிப்பிட்ட அவர், இந்த இக்கட்டான சூழ்நிலையில் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கக் கேட்டுக் கொண்டார்.
வெள்ள நிவாரணப் பணிகளுக்கு உதவி வருகின்ற அனைத்து துறையினருக்கும் அதிகாரிகளுக்கும் தமது நன்றியையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.

கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks